ANTARABANGSA

சூடான் உள்நாட்டுப் போர்- மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 97ஆக உயர்வு

கார்ட்டூம், ஏப் 17- சூடான் தலைநகர் கார்ட்டூமில் நிகழ்ந்த வரும்
உள்நாட்டுப் போர் இன்று மூன்றாவது நாளை எட்டியுள்ள நிலையில்
இந்த இரத்தக்களரியில் இதுவரை 97 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சண்டையில் நூற்றுக்கணக்கான பொது மக்கள் காயமடைந்துள்ளதாக
சூடான் மருத்துவர்கள் சங்கம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

சூடானில் ஏற்பட்டுள்ள பதட்ட நிலை உலக நாடுகள் மத்தியில்
கவலையை ஏற்படுத்தியுள்ளது. அங்கு உடனடியாக போர் நிறுத்தம்
அமல்படுத்தப்பட வேண்டும் என ஐ.நா., ஆப்பிரிக்க ஒன்றியம், அரபு லீக்
உள்ளிட்ட அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

சூடானிய இராணுவத்திற்கு விரைவு ஆதரவு துணைப்
படைகளுக்குமிடையே கடந்த சனிக்கிழமை சண்டை ஏற்பட்டது. கார்ட்டூம்
மற்றும் இதர நகரங்களில் நிகழ்ந்து வரும் மோதல்களுக்கு அவ்விரு
தரப்புகளும் ஒன்றை மற்றொன்று குற்றஞ்சாட்டி வருகின்றன.

போர் நிகழ்ந்து வரும் சூடானில் 29 மலேசியர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர்.
அவர்களில் பெரும்பாலோர் மாணவர்களாவர். அவர்கள் அனைவரும்
பாதுகாப்பாக உள்ளதாக விஸ்மா புத்ரா கூறியுள்ளது.


Pengarang :