SELANGOR

மாநிலத் தொகுதிகளில் வசிக்கும் 100 பேருக்கு RM200 மதிப்புள்ள ஜோம் ஷாப்பிங் ஐடில்பித்ரி வவ்வுச்சர்கள் வழங்கப்பட்டன

ஷா ஆலம், ஏப்ரல் 17: மாநிலத் தொகுதிகளில் வசிக்கும் மேலும் 100 பேர் கடந்த சனிக்கிழமை RM200 மதிப்புள்ள ஜோம் ஷாப்பிங் ஐடில்பித்ரி வவுச்சர்களைப் பெற்றுள்ளனர்.

இரண்டாவது அமர்வில் RM20,000 மதிப்புள்ள வவுச்சர்களை வழங்கப்பட்டதாக அதன் சட்டமன்ற உறுப்பினர் ரோசானா ஜைனல் அபிடின் கூறினார்.

“ஒரு வாரத்திற்குள் வரவிருக்கும் ஐடில்பித்ரி பண்டிக்கைக்கான அத்தியாவசிய பொருட்களை வாங்க பெறுநர்கள் இந்த வவுச்சரைப் பயன்படுத்தலாம்” என்று அவர் பேஸ்புக் மூலம் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி, 450 பெறுநர்களுக்கு ஜோம் ஷாப்பிங் ஐடில்பித்ரி வவுச்சர்களை வழங்குவதற்காகத் தொகுதி RM90,000 ஒதுக்கீடு செய்தது.

சிலாங்கூர் பட்ஜெட் 2023, பண்டிக்கை முன்னிட்டு ஜோம் ஷாப்பிங் வவுச்சர் திட்டத்திற்காக RM16.48 மில்லியன் ஒதுக்கியது. இது 82,400 பெறுநர்களுக்குப் பயனளிக்கும்.

இத்திட்டம் ஐடில்பித்ரி, சீனப் புத்தாண்டு மற்றும் தீபாவளி ஆகிய மூன்று முக்கிய பண்டிகைகளை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் வசதி குறைந்த குடும்பங்களின் சுமையைக் குறைக்கும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.


Pengarang :