NATIONAL

பின்னோக்கி நகர்ந்த லோரி எட்டு வாகனங்களை மோதித் தள்ளியது- ரவாங்கில் சம்பவம்

ஷா ஆலம், ஏப் 18- பிரேக் செயலிழந்ததால் கட்டுப்பாட்டை இழந்து
பின்னோக்கி நகர்ந்த மணல் லோரி எட்டு வாகனங்களை மோதித்
தள்ளியது. இச்சம்பவம், ஜாலான் ரவாங் முத்தியாரா சாலை சமிக்ஞை
விளக்குப் பகுதியில் நேற்று மாலை நிகழ்ந்தது.

சிவப்பு விளக்கில் அந்த வாகனங்கள் இடது தடத்தில் நின்றிருந்த சமயம்
இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கோம்பாக் மாவட்டப் போலீஸ் தலைவர் ஏசிபி
ஜைனால் முகமது முகமது கூறினார்.

நேற்று மாலை 3.40 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில்
வாகனமோட்டிகள் மற்றும் பயணிகளுக்குக் காயம் ஏற்படவில்லை என்று
அவர் தெரவித்தார்.

மற்ற வாகனங்களுக்கு முன்னாள் நின்று கொண்டிருந்த அந்த லோரி
திடீரென கட்டுப்பாட்டை இழந்து பின்னோக்கி நகர்ந்து அந்த தடத்திலிருந்த
இதர வாகனங்களை மோதித் தள்ளியது என்று அவர் தெரிவித்ததாகப்
பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட வாகனங்களை அடையாளம் காணும்
முயற்சியில் தாங்கள் ஈடுபட்டுள்ளதாக கூறிய அவர், இச்சம்பவம்
தொடர்பில் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின் 43(1)
பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என்றார்.


Pengarang :