SELANGOR

தாமான் ரிம்பா கியாராவில் மேம்பாட்டுத் திட்டத்திற்கு அனுமதி கிடையாது- கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பு

புத்ரா ஜெயா, ஏப் 18- தலைநகர் தாமான் துன் டாக்டர் இஸ்மாயிலில்
ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளை உள்ளடக்கிய தாமான் ரிம்பா
கியாரா திட்டத்தை மேற்கொள்வதற்குக் கோலாலம்பூர் மாநகர் மன்றம்
வழங்கிய அனுமதியை இங்குள்ள கூட்டரசு நீதிமன்றம் இன்று ரத்து
செய்தது.

மலாயா தலைமை நீதிபதி டத்தோ முகமது ஜபிடின் முகமது டியா,
கூட்டரசு நீதிபதிகளான டத்தோ நளின் பத்மநாபன் மற்றும் டத்தோ
ரோட்ஸாரியா பூஜாங் ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த
முடிவை ஏகமனதாக அறிவித்தது.

இந்த மேல் முறையீட்டு மனுவில் அடிப்படை முகாந்திரம் இல்லை
என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறினர்.

இந்த உத்தேச ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புத் திட்டம் 9
புளோக்குகளை உள்ளடக்கியிருந்தது. அவற்றில் எட்டு புளோக்குகள் 42
முதல் 54 மாடி வரையிலான செர்விஸ் அப்பார்ட்மெண்ட்களையும் ஒரு
புளோக் 29 மாடி கட்டுபடி விலை குடியிருப்பையும் கொண்டுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டில் டி.டி.டி.ஐ. குடியிருப்பாளர் சங்கம் தாக்கல் செய்த
சீராய்வு மனுவை ஏற்றுக் கொண்ட மேல் முறையீட்டு நீதிமன்றம் அந்த
மேம்பாட்டுத் திட்டத்திற்கான மனுவை தள்ளுபடி செய்தது.


Pengarang :