NATIONAL

காற்றுத் தரம் மோசமடைந்தால் பள்ளிகளில் புறப்பாட நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்

சிரம்பான், ஏப் 18- காற்றுத் தரக் குறியீடு (ஐ.பி.யு.) 101ஐத் தாண்டினால்
புறப்பாட நடவடிக்கைகளை பள்ளி நிர்வாகங்கள் நிறுத்த வேண்டும் என்று
கல்வித் துணையமைச்சர் லிம் ஹூய் யிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

கல்வியமைச்சின் சீரான செயலாக்க நடைமுறைகளில் (எஸ்.ஒ.பி..)
இதுவும் ஒன்றாகும் எனக் கூறிய அவர், இதன் தொடர்பில் அடுத்தக் கட்ட
நடவடிக்கை எடுப்பது குறித்த சுற்றிக்கையை மாநில மற்றும் மாவட்ட
கல்வித் துறைகள் பள்ளிகளுக்கு அனுப்பும் என்றார்.

காற்றின் தரக் குறியீடு 200 புள்ளிகளைத் தாண்டும் பட்சத்தில் அனைத்து
பள்ளிகளையும் மூடுவதற்கு உத்தரவிடப்படும். ஐ.பி.யு. 101 என்பது
ஆரோக்கியமற்ற நிலையை குறிக்கும். இத்தகை சூழலில் அனைத்துப்
பள்ளிகளும் புறப்பாட நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என்றார்
அவர்.

அனைத்து மாணவர்களும் முகக்கவரி அணிய ஊக்குவிக்கப்படுவதோடு
அடிக்கடி நீர் அருந்தவும் வெயிலில் வெளிப்புற நடவடிக்கைகளை
மேற்கொள்வதை நிறுத்தவும் அறிவுறுத்தப்படுகின்றனர் என்று அவர்
மேலும் தெரிவித்தார்.

இன்று இங்குள்ள கம்போங் பாரு ரஹாங் சீனப்பள்ளிக்கு வருகை புரிந்தப்
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.


Pengarang :