NATIONAL

சுபாங் ஜெயா வட்டாரத்தில் கடந்த வாரம் 2,253 டிங்கி சம்பவங்கள் பதிவு

ஷா ஆலம், ஏப் 19- சுபாங் ஜெயா மாநகர் மன்றம் கடந்த வாரம் 2,253
டிங்கி காய்ச்சல் சம்பவங்களைப் பதிவு செய்துள்ளது.

கடந்தாண்டின் இதே காலக்கட்டத்தைக் காட்டிலும் இவ்வாண்டில் 1,064
டிங்கி சம்பவங்கள் அதிகரித்துள்ளதை இந்த எண்ணிக்கை காட்டுகிறது
என்று மாநகர் மன்றத்தின் துணை டத்தோ பண்டார் முகமது
ஜூல்கர்னாய்ன் சே அலி கூறினார்.

பன்னிரண்டு மாடி குடியிருப்பு உள்பட 12 இடங்களில் இந்த டிங்கி
சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டன. சுற்றுவட்டாரங்களில் ஏடிஸ்
கொசுக்கள் உற்பத்தியாகாமலிருப்பதை உறுதி செய்வதில் குடியிருப்பாளர்
நிர்வாகங்கள் உள்பட அனைத்துத் தரப்பினருக்கும் பொறுப்பு உள்ளதாக
அவர் சொன்னார்.

வாரத்தில் பத்து நிமிடங்களை செலவிட்டு வீட்டின் சுற்றுப்புறங்களில்
உள்ள ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அடையாளம் கண்டு
அழிக்கும்படி குடியிருப்பாளர்களை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம் என
அவர் தெரிவித்தார்.

டிங்கி அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் கொசு மருந்துகளைத்
தெளிக்கும் அதேவேளையில் கொசு வலையையும் பயன்படுத்த வேண்டும்
என அவர் வலியுறுத்தினார்.


Pengarang :