NATIONAL

சாலை  விபத்து ஏற்படும் 76 இடங்களை சாலை போக்குவரத்து துறை அடையாளம் கண்டுள்ளது

உலு லங்காட், ஏப்ரல் 19: சாலைப் போக்குவரத்து துறை (ஜேபிஜே) விபத்துகள் ஏற்படும்  76 முக்கிய இடங்கள் அல்லது ‘பிளாக்ஸ்பாட் களை’ அடையாளம் கண்டுள்ளது. அவை இன்று முதல் ஏப்ரல் 27 வரை ஓப்ஸ் பெர்செபாடு ஐடில்ஃபித்ரியின் கண்காணிப்பில் இருக்கும்.

அனைத்து இடங்களும் பெடரல் சாலையை உள்ளடக்கியதாக உள்ளது காரணம் இவ்விடங்கள் அதிக விபத்துகள் ஏற்படும் அபாயத்தில் உள்ளன எனப் போக்குவரத்து துணை அமைச்சர் கூறினார்.

“நாடு முழுவதும் இந்த ஆண்டு ஓப்ஸ் ஐடில்ஃபித்ரியில் சுமார் 2,000 ஜேபிஜே அமலாக்க உறுப்பினர்கள் நேரடியாகப் பணியில் அமர்த்தப் படவுள்ளனர்.

“அவர்களின் விடுமுறைகள் முடக்கப்பட்டுள்ளன. தேவை ஏற்பட்டால் நாங்கள் அவ்வப்போது 2,300 முதல் 2,500 உறுப்பினர்களை அனுப்புவோம்” என்று டத்தோ ஹஸ்பி ஹபிபொல்லா கூறினார்.

பயணத்தைத் தொடங்கும் முன், சாலைப் பயனாளிகள் தங்கள் வாகனங்கள் நன்றாகப் பராமரிக்கப்பட்டு, பாதுகாப்பாகப் பயணம் செய்வதை உறுதி செய்யுமாறு ஹஸ்பி கேட்டுக் கொண்டார்.

“சீரானப் பயணத்திற்குத் திட்டமிடுதல் மிகவும் முக்கியம். மேலும், விதிகளுக்குக் கீழ்ப்படிந்து, சாலையைப் பயன்படுத்தும் போது கவனமாக இருங்கள்.

“சாலையைப் பயன்படுத்துவோர் போதுமான அளவு ஓய்வெடுக்கவும். அதாவது பாதுகாப்பான இடத்தில் அல்லது ஓய்வெடுக்கும் இடத்தில் நிறுத்தி, சோர்வாக இருந்தால் ஓய்வெடுத்து கொள்ளவும். சாலை நெரிசல் போது எப்போதும் சகிப்புத்தன்மையுடன் பொறுமையுடனும் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

மைஜேபிஜே விண்ணப்பத்தின் மூலம் http://e-Aduan@jpj அல்லது மின்னஞ்சல் [email protected] மூலம் புகார்களை அனுப்பலாம்.


Pengarang :