NATIONAL

இடைப்பட்ட பருவமழை காரணமாக இடியுடன் கூடிய மழை பெய்யும்

ஷா ஆலம், ஏப்ரல் 19:  அடுத்த ஓரிரு வாரங்களில் இடைப்பட்ட பருவமழை காரணமாக மலேசியாவில் வெப்பமான வானிலை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஃபெலோ அகாடமி சயின்ஸ் மலேசியா கூற்றுப்படி, நிலத்தடி பகுதிகளில் தீ ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கக்கூடிய வெப்பமும், மேலும் வறண்ட காலநிலையும் காணப்படுவதாக அஸ்ட்ரோ அவானி தெரிவித்துள்ளது.

ஃப்ரெடோலின் தாஜுதீன் டாங்காங் கருத்துப்படி, வானிலை இடியுடன் கூடிய மழையாகவும்,  குறிப்பாக கோலாலம்பூர் போன்ற நகர்ப்புறங்களில் திடீர் வெள்ளம் ஏற்படும் சாத்தியம் உண்டு.

“காட்டுத் தீ ஏற்பட்டால், குறிப்பாக கரி நிலத்தில், அதை அணைப்பது கடினம் ஆகும். புகைமூட்டத்தால் நிச்சயம் மற்ற சிக்கல்களும் ஏற்படும்  என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும்.

” பல மாதங்களுக்கு நீடிக்கும் புகைமூட்டத்தை நாங்கள் விரும்பவில்லை, ஏனெனில் அது உடல்நலப் பிரச்சனைகள் மற்றும் பல நோய்களை ஏற்படுத்தும்,” என்று அவர் போர்ட்டல் மூலம் தெரிவித்தார்.

கனமழைக்கு ஏற்ப வடிகால் அமைப்பு பராமரிப்பதின், தீ விபத்துகளை தவிர்க்க காடு மற்றும் வறண்ட புதர் பகுதிகளில் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

முன்னதாக, பருவநிலை மாற்ற அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மட், நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான வானிலை பருவமழை மாற்றத்தைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறியிருந்தார்.


Pengarang :