NATIONAL

மலேசியர்கள் ஒற்றுமையை வளர்த்து நாட்டை மேம்படுத்துவர்- பிரதமரின் நோன்புப் பெருநாள் வாழ்த்து

கோலாலம்பூர், ஏப் 20- தாங்கள் பெரிதும் நேசிக்கும் நாட்டைப்
பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் எதுவாக மலேசியர்கள்
ஒற்றுமையை வலுப்படுத்துவார்கள் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கிடையிலான ஒற்றும நாட்டின் கௌரவத்தை உயர்த்தி
அமைதியுடனும் சுபிட்சத்துடனும் வாழ்வதற்குரிய சூழலை உருவாக்கும்
எனத் தாம் நம்புவதாக அவர் சொன்னார்.

விரைவில் கொண்டாடப்படவிருக்கும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு
நாட்டிலுள்ள முஸ்லீம்களுக்கு வழங்கிய வாழ்த்துச் செய்தியில் அவர்
இவ்வாறு குறிப்பிட்டார்.

ரமலான் கரீமிற்கு பிறகு நம்மையும் நமது ஆன்மாவையும் சுத்தப்படுத்தி
நம் சமூகம், கௌரவத்தை உயர்த்துவது போல் மலேசியர்களின்
ஒற்றுமையையும் வலுப்படுத்துவோம். நாட்டை மேம்படுத்துவோம் என்று
அவர் குறிப்பிட்டார்.

நேற்றிரவு தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்த 2 நிமிடம் 36
விநாடி காணொளியில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.


Pengarang :