NATIONAL

ஐடில்பித்ரியின் போது நீர் தரம், சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடு  உறுதிப்படுத்த லுவாஸ் எப்போதும் தயார் நிலை உள்ளது

ஷா ஆலம், ஏப்ரல் 22: சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் (LUAS) நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் (LRA) செயல்பாட்டை உறுதிசெய்ய எப்போதும் தயார் நிலையில் உள்ளது மற்றும் பயனர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நீர் விநியோகமும் நல்ல நிலையில் உள்ளது.

ஏஜென்சியின் கூற்றுப்படி,  ஐடில்பித்ரியின் முதல் நாள் உட்பட, ரோந்துப் பணிகளை மேற்கொள்வதன் மூலம், சிலாங்கூரின் முக்கிய நதியின் நிலையைக் கண்காணிப்பின் மூலமும் நாள் மற்றும் நேரத்தைப் பொருட்படுத்தாமல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

“லுவாஸ் எப்பொழுதும் மூல நீரின் தர பிரச்சினைகள் தவிர்க்கப் படுவதையும், உடனடியாக சமாளிக்கப் படுவதையும் உறுதிப்படுத்த தயாராக உள்ளது.

இதற்கு காரணம், ஐடில்பித்ரி கொண்டாட்டத்தின் போது, நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாடுகள் மற்றும் நீர் விநியோகம் தடை படாமல் இருக்கவும் மேலும் அது மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்காமல் இருக்கவும் வேண்டும் என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, சுற்றுச்சூழல் எஸ்கோ, 24 மணி நேர நீர்வள ஆப்ஸ் தொடர்ந்து செயல் படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும் என்று கூறியது. இதனால் எந்த ஒரு நீர் ஆதார தர சிக்கல்களும் தடுக்கப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்  என்றார்.

ஹி லோய் சியான் இன் கூற்றுப்படி, சுங்கை சிலாங்கூர் மற்றும் சுங்கை லங்காடில் லுவாஸ் இடைவிடாத நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது அதாவது அங்கு ரோந்து மற்றும் நிலையான கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன.


Pengarang :