NATIONAL

சாலை நெரிசலை சமாளிக்கும் நடவடிக்கையாக வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் இரண்டு ஸ்மார்ட் வழிகள் செயல்படுத்தப்பட்டன

கோலாலம்பூர், ஏப்ரல் 25: பொது விடுமுறைக்கு பிறகு கிள்ளான் பள்ளத்தாக்கு க்கு வாகனங்கள் திரும்புவதைத் தொடர்ந்து, சாலை நெரிசலை சமாளிக்கும் நடவடிக்கையாக, காவல்துறை மற்றும் பிளாஸ் பெர்ஹாட் (பிளாஸ்) வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் இரண்டு ஸ்மார்ட் வழிகளைச் செயல்படுத்தியது.

புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை (JSPT) இயக்குனர் டத்தோஸ்ரீ மாட் காசிம் கரீம் கூறுகையில், கிலோமீட்டர் (KM) 259 போர்ட் டிக்சன் சந்திப்பிலிருந்து KM263 வடக்கு நோக்கி சிரம்பான் சந்திப்பு மற்றும் KM19 செனாய் சந்திப்பிலிருந்து KM27 வடக்கு நோக்கி கூலாய் சந்திப்பு வரை இரண்டு வழித்தடங்கள் செயல் படுத்தப் பட்டுள்ளன.

“தெற்கு, வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து தலைநகரை நோக்கி அதிக அளவில் வாகனங்கள் வருவதால், மேடு பகுதி மற்றும் மூன்றிலிருந்து இரண்டு வழிச்சாலையாக மாறும் சில இடங்களில் நெரிசல் ஏற்படுகிறது.

நெடுஞ்சாலைகள், மத்திய சாலைகள், மாநில சாலைகள் மற்றும் நகர்ப்புற சாலைகளில் நெரிசல் அதிகம் உள்ள இடங்களில்   அதிகாரிகள், உறுப்பினர்கள் மற்றும் ட்ரோன் பிரிவுகள் சீரான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்தை உறுதிசெய்ய முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

ஸ்மார்ட் வழிகள் அனைத்து பாதைகளின் பயன்பாட்டை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

24 மணி நேரமும் செயல்படும் புக்கிட் அமான் போக்குவரத்து செயல்பாட்டு அறைக்கு 03-22663356 என்ற எண்ணின் மூலம் தொடர்பு கொண்டு விபத்துகள் அல்லது அசாதாரண நெரிசல் தொடர்பான தகவல்களைப் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று மாட் காசிம் கூறினார்.

இதற்கிடையில், ஜேஎஸ்பிதி தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவின் மூலம் நாடு முழுவதும் ஓபி செலமாட் 20இன் நான்காவது நாளான நேற்று 2,072 பல்வேறு வகையான வாகனங்கள் சம்பந்தப்பட்ட மொத்தம் 1,381 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.

மேலும் சாலையில் பயணிப்பவர்கள் விபத்தில் சிக்கிக்கொள்ளும் அபாயத்தைத் தவிர்க்க வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கையாக இருக்குமாறு புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை அறிவுறுத்துகிறது.

– பெர்னாமா


Pengarang :