NATIONAL

ஓப் செலாமாட் 20-ன் ஐந்தாவது நாளில் 1,551 விபத்துகள் பதிவு

கோலாலம்பூர், ஏப்ரல் 26: ஓப் செலாமட் 20-ன் ஐந்தாவது நாளில் நாடு முழுவதும் 1,551 விபத்துகளை ராயல் மலேசியன் காவல்துறை பதிவு செய்துள்ளது.

புலனாய்வு மற்றும் போக்குவரத்து அமலாக்கத் துறை (ஜேஎஸ்பிடி) முகநூலில் ஒரு பதிவில் அவ்விபத்துகள் அனைத்தும் 2,327 வாகனங்கள் சம்பந்தப்பட்டதாக உள்ளது எனத் தெரிவித்தது.

” கார்கள் அதிக எண்ணிக்கையிலான விபத்துகளை பதிவு செய்துள்ளன, இவை பதிவு செய்யப்பட்ட மொத்தச் சம்பவங்களில் 1,790 அல்லது 76.9 சதவீதம் ஆகும்.

“இதைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் (315), நான்கு சக்கர வாகனங்கள் (103), பல்நோக்கு வாகனங்கள் (63), வேன்கள் (43), லாரிகள் (8), பேருந்துகள் (3) மற்றும் டாக்சிகள் (2) என விபத்துகள் பதிவாகியுள்ளன.”

மேலும் சாலையில் பயணிப்பவர்கள் விபத்தில் சிக்கிக்கொள்ளும் அபாயத்தை தவிர்க்க வாகனம் ஓட்டும் போது எச்சரிக்கையாக இருக்குமாறு புலனாய்வு மற்றும் போக்குவரத்து அமலாக்கத்துறை அறிவுறுத்துகிறது.

– பெர்னாமா


Pengarang :