NATIONAL

மலேசியாவில் வணிகங்களை குறிவைக்கும் இணையத்தள அச்சுறுத்தல்கள் கடந்த ஆண்டு 197 சதவீதம் அதிகரிப்பு

கோலாலம்பூர், ஏப்ரல் 27: மலேசியாவில் வணிகங்களை குறிவைக்கும் இணையத்தள அச்சுறுத்தல்கள் கடந்த ஆண்டு 197 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலகளாவிய சைபர் பாதுகாப்பு மற்றும் வைரஸ் தடுப்பு வழங்குநர் காஸ்பர்ஸ்கி தெரிவித்துள்ளது.

காஸ்பர்ஸ்கி இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், 2020ஆம் ஆண்டில் தொற்றுநோயின் உச்சத்தின் போது, தென்கிழக்கு ஆசியாவில் உள்ள வணிகங்களைப் பாதிக்கக்கூடிய 10,200,817 வலைத்தள தாக்குதல்களைத் தடுத்தது.

” 2021 இல் இணையதளத் தாக்குதல்களின் எண்ணிக்கை 9,180,344 ஆக இருந்த நிலையில் 2022 இல் 13,381,164 ஆக அதிகரித்தது,” என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டு வணிகங்களை குறிவைத்த இணையத்தள அச்சுறுத்தல்களில் சிங்கப்பூர் ஆண்டுக்கு ஆண்டு மிக அதிகமான எண்ணிக்கை பதிவு செய்துள்ளதாக காஸ்பர்ஸ்கி தெரிவித்தது.

“காஸ்பர்ஸ்கி வணிக தீர்வுகள் மொத்தம் 889,093 சைபர் தாக்குதல்களை தடுத்து பிறகு, தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நாடுகள் மூன்று மடங்கு அதிகரிப்பைக் கண்டன (329 சதவீதம்).

மலேசியா (197 சதவீதம்), தாய்லாந்து (63 சதவீதம்), இந்தோனேசியா (46 சதவீதம்) மற்றும் பிலிப்பைன்ஸ் (29 சதவீதம்) ஆகியவற்றுடன் மற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் இந்த அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இணையதளம் சார்ந்த அல்லது இணைய அச்சுறுத்தல்கள், தீங்கிழைக்கும் இணையதளங்கள் அல்லது மென்பொருளைப் பதிவிறக்கம் செய்யும் போது நிகழ்கின்றன.

இணையதள சேவை பயனர்கள், உருவாக்குபவர்கள் மற்றும் ஆபரேட்டர்களின் தவறுகளால் இணையதள அச்சுறுத்தல்கள் ஏற்படுவதாகக் காஸ்பர்ஸ்கி கூறுகிறது.

“நோக்கம் அல்லது காரணங்கள் எதுவாக இருந்தாலும் இணையத்தள அச்சுறுத்தல்களின் விளைவுகள் தனிநபர்களும் நிறுவனங்களையும் சேதப்படுத்தும்,” என்று அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :