NATIONAL

20 பேரின் தனிப்பட்ட தகவல்கள் இணைய மோசடி நபர்களால்  கருப்பு வலைதளங்களில்  பகிரப்படுகிறது

கோலாலம்பூர், ஏப்ரல் 27: கிரெடிட் கவுன்சிலிங் அண்ட் மேனேஜ்மென்ட் ஏஜென்சி (ஏகேபிகே) தனது வாடிக்கையாளர்களில் சுமார் 20 பேரின் பெயர் மற்றும்’’ மைகாட்’’ அடையாள அட்டை எண் போன்ற தனிப்பட்ட தகவல்கள் இணையத்தளம் அல்லது டார்க் வெப்களில் இணைய  மோசடி நபர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

கிரெடிட் கவுன்சிலிங் அண்ட் மேனேஜ்மென்ட் ஏஜென்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், குற்றவாளி பெயர் மற்றும் மைகாட் அடையாள அட்டை எண் உள்ளிட்ட கூடுதல் தகவல்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

” இணையப் பாதுகாப்பு நிபுணரான மூன்றாம் தரப்பினரின் விசாரணையும் இன்னும் நடந்து வருகிறது.

“இணைய மோசடி நபர்களால் திருடப்பட்ட அனைத்து தகவல்களும் சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் பெறப்பட்டவை என்பதை குறிப்பிடுவது முக்கியம், எனவே அதை எடுத்துக்கொள்வது, பயன்படுத்துவது மற்றும் பரப்புவது ஆகியவை கிரிமினல் குற்றம்” என்று அவர் கூறினார்.

நடந்து வரும் விரிவான விசாரணையில் மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் மற்றும் சைபர் செக்யூரிட்டி அமைச்சகம் உட்பட சட்ட அதிகாரிகள் மற்றும் பிற அதிகாரிகளுடன் நெருக்கமாகச் செயல் படுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது.

“சட்டவிரோதமாக அணுகப்பட்ட தகவல்களை அடையாளம் காண நாங்கள் பணியாற்றி வருகிறோம், மேலும் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்போம்,” என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. .

மார்ச் 30 அன்று,  அந்நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப அமைப்பு ஹேக் செய்யப்பட்ட பிறகு மேலும் எந்த ஆபத்து ஏற்படாமல் தவிர்க்க அதன் இயக்க முறைமைகளில் சிலவற்றை தற்காலிகமாகச் செயலிழக்கச் செய்தது.

கிரெடிட் கவுன்சிலிங் அண்ட் மேனேஜ்மென்ட் ஏஜென்சி வாடிக்கையாளர்கள் 03-26167766 என்ற எண்ணில் பிரத்யேக அழைப்பு மையத்தைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது அருகிலுள்ள அதன் கிளைகளின் பற்றிய தகவலுக்கு https://www.akpk.org.my/branches நாடலாம்.

– பெர்னாமா


Pengarang :