SELANGOR

தாமான் பூச்சோங் பெர்மாய் அடுக்கு மாடி வீடுகளின் கூரை மற்றும் தண்ணீர் தொட்டியை சரி செய்வதற்கு ரிம 50,000 ஒதுக்கீடு

ஷா ஆலம், மே 2: ஏப்ரல் 8 ஆம் தேதி புயலால் சேதமடைந்த தாமான் பூச்சோங் பெர்மாய் (A) அடுக்கு மாடி வீடுகளின் கூரையைச் சரிசெய்ய, ஶ்ரீ செர்டாங் தொகுதி தோராயமாக ரிம 50,000 ஒதுக்கீடு செய்துள்ளது.

ஶ்ரீ செர்டாங் தொகுதியின் சிறப்பு அதிகாரி (உள்கட்டமைப்பு), 25 ஆண்டுகள் பழமையான நான்கு குறைந்த விலை புளோக்குகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணி, சேதமடைந்த மழைக் கால கால்வாய்களை மாற்றுவதையும் உள்ளடக்கியது.

“இந்த பழுதுபார்க்கும் பணி 2021 முதல் இவ்வாண்டு வரை ஶ்ரீ செர்டாங் தொகுதியின் கீழ் மேற்கொள்ளப்படும் மூன்றாவது பழுதுபார்க்கும் திட்டமாகும்.

“இந்தத் திட்டமானது ஒரு பெரிய ஒதுக்கீட்டை உள்ளடக்கியது மற்றும் RM50,000 மதிப்பு தக்க சிலாங்கூர் பென்யாயாங் 2.0 கட்டம் 1 திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது” என்று ஃபௌசன் ரோஸ்லி சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

200 குடும்பங்கள் அல்லது 1,000 குடியிருப்பாளர்கள் வசிக்கும் அந்த அடுக்குமாடி குடியிருப்புகளின் சீரமைப்பு பணிகள் தற்போதைய வானிலைக்கு ஏற்ப இம்மாதப் பாதியில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

” ஶ்ரீ செர்டாங் தொகுதி எப்பொழுதும் அதன் குடிமக்களுக்கு நல்ல சேவையை வழங்குகிறது மற்றும் உதவி தேவைப்படும் மக்களை ஓரம் கட்டுவதில்லை.

“ஏதேனும் கேள்விகள் அல்லது புகார்கள் இருந்தால் ஶ்ரீ செர்டாங் தொகுதியின் சமூகச் சேவை மையத்தை 03 8066 2924 என்ற எண்ணின் மூலம் தொடர்பு கொள்ளலாம்” என்று அவர் கூறினார்.


Pengarang :