SELANGOR

சிலாங்கூர் சித்தம் மற்றும் கோலசிலாங்கூர் (Zon 18) கவுன்சிலர் ஏற்பாட்டில் இலவச அணிச்சல் தயாரிக்கும் பயிற்சி பட்டறை

கோல சிலாங்கூர் மே 3: கோல சிலாங்கூரில்  அணிச்சல் செய்யும் இலவசப்  பயிற்சி பட்டறை   டேசா கோல்பீல்டு நகர மண்டபத்தில் சிறப்பாக  ஏற்பாடு செய்யப்பட்டது.  இப்பயிற்சி பட்டறைக்கு சிறப்பு வருகையாளராகக் கோலசிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர் ஹஜி சூல் கிப்லி அமாட் அவர்கள்  வருகை அளித்து.  இந்த இலவசப் பட்டறையை திறந்து வைத்தார்.

அப்பொழுது அவர்  ஆற்றிய உரையில், பெண்களுக்கு  ஊக்கமளிக்கவும் அவர்களின்  ஆற்றலை  அதிகரிக்கவும்  இது போன்ற பயிற்சிகளை  அதிகமாக நடத்த ஏற்பாட்டாளர்களைக் கேட்டுக்கொண்டார்.  பெண்களுக்கான   இந்த அணிச்சல் பட்டறையை  ஏற்பாடு செய்தமைக்கு ஏற்பாட்டாளர்களுக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்  கொண்டார்.
வீட்டில் இருக்கும்  மகளிருக்கு இது போன்ற பயனுள்ள பயிற்சிகள் இன்றைய காலகட்டத்தில் முக முக்கியமான ஒன்றாகும். இன்று இந்த இலவசப் பயிற்சி பட்டறையில் அதிகமானவர்கள்  வந்து கலந்து கொண்டிருப்பது , மக்கள் இதை விரும்புகிறார்கள் என்பதற்குச் சான்று எனக் குறிப்பிட்டார்.

சுமார் 35 பெண்கள் கலந்து கொண்ட இந்த இலவசப் பயிற்சி பட்டறையில் கோலசிலாங்கூர் கெ அடிலான் தலைவர் தீபன் சுப்ரமணியமும்,  சிலாங்கூர் சித்தம் தலைவர் திரு : கென்னத் செம், திரு : சரவணன், மேலும் இப்பட்டறை பயிற்சிக்கு ஒத்துழைப்பு நல்கிய திரு:அபாஸ் அஸ்மி, திரு . நஸ்ரில் பீடின், அலெக்ஸ்ஷண்டர் ஆரோக்கியசாமி, திரு .விக்னேஸ்வரன், திரு : விக்கி, மற்றும் திரு .மணிவர்மன், ஆகியோருக்கும்,வருகை அளித்த அனைவருக்கும் இந்த பயிற்சி பட்டறை ஏற்பாட்டு குழு தலைவரும்,  கோலசிலாங்கூர் நகராண்மைக் கழக உறுப்பினருமான (zon 18) திரு சிவபாலன் முகுந்தன் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார். காலை 9:00  மணியளவில் தொடங்கிய  இந்த இலவசப் பயிற்சி பட்டறை சுமார் 1:00 – மணி அளவில்  இனிதே  நிறைவுற்றது.

Pengarang :