SELANGOR

2,000 ஸ்கிம்  மெஸ்ர உசிய எமாஸ் வவுச்சர்கள் வழங்கப்படும் – மேரு தொகுதி

கிள்ளான், மே 3: மேரு தொகுதியில் வசிப்பவர்களுக்கு மொத்தம் 2,000 ஸ்கிம்  மெஸ்ர உசிய எமாஸ்  (SMUE) திட்டத்திற்கான வவுச்சர்கள் எதிர்காலத்தில் விநியோகிக்கப்படும்.

மேரு தொகுதி சட்டமன்ற உறுப்பினரின் சிறப்பு அதிகாரி நோர்லெனா நயன், எனினும் இத்திட்டத்திற்கு பதிவு செய்யாத முதியோர்கள் இன்னும் இருப்பதால் ஒதுக்கீட்டை நிரப்புவதற்கு அவரது தரப்பு காத்திருப்பதாக தெரிவித்தார்.

“இந்த ஊக்கத்தொகையை பெறத் தகுதியுடைய பெற்றோரின் பெயர்களை பதிவு செய்ய உதவுமாறு அவர்களின் பிள்ளைகளை கேட்டுக்கொள்கிறோம். அவர்கள் விண்ணப்பதாரர் மற்றும் உறவினர்களின் அடையாள அட்டையின் நகலுடன் மேரு தொகுதி சமூகச் சேவை மையத்திற்கு வரலாம் அல்லது இணைய வழி விண்ணப்பிக்கலாம்.

“இதுவரை எந்த இறுதித் தேதியும் அறிவிக்கப்படவில்லை; அதனால் விண்ணப்பங்களை அனுப்பலாம் மற்றும் இணையத்தளம் மூலம் தகுதித் தேவைகளைச் சரிபார்க்கலாம்,” என்று அவரைச் சந்தித்தபோது கூறினார்.

இந்த ஆண்டு முதல், ஸ்கிம்  மெஸ்ர உசிய எமாஸ் வவுச்சர்களின் மதிப்பு RM150 ஆக அதிகரிக்கப் பட்டுள்ளது. மேலும் RM37.5 மில்லியன் ஒதுக்கீட்டில் ஸ்கிம் மெஸ்ர இன்சான் இஸ்திமேவா (SMIS) திட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு அதே தொகை வழங்கப்படுகிறது.


Pengarang :