SELANGOR

ஒரு மணி நேரத்தில் 400 கோழிகள் விற்பனை

செலாயாங், மே 8: சுங்கை துவா தொகுதியின் ஜெலாஜா ஏஹ்சான் ரக்யாட் (JER) நிகழ்வில் ஒரு மணி நேரத்தில் மொத்தம் 400 கோழிகள் விற்பனை செய்யப்பட்டன.

சந்தை விலையுடன் ஒப்பிடும்போது மலிவாக விற்கப்படும் பல்வேறு அடிப்படை பொருட்களை வாங்க காலை 7 மணிக்கே மக்கள் நூற்றுக்கணக்கானோர் குவிந்த தாகச் சமூகச் சேவை மைய அதிகாரி தெரிவித்தார்.

“காலை 7 மணி முதல் குடியிருப்பாளர்கள் வரிசையில் நிற்கத் தொடங்கினர், காலை 11 மணிக்குள் 400க்கும் மேற்பட்ட கோழிகள் விற்றுத் தீர்ந்தன. மேலும், முட்டை மற்றும் அரிசி கூட அதிகமாக விற்கப்பட்டன.

“ஹரி ராயா விடுமுறைக்குப் பிறகு, வரவேற்பு அதிகமாகி வருகிறது. ஐடில்பித்ரி விருந்துக்குப் பொருட்களை வாங்க பலர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ளலாம்,” என்று பி.சண்முகம் சிலாங்கூர்கினியைச் சந்தித்தபோது கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், பல்வேறு மாநிலத் நலத்திட்டங்களை விளம்பரப்படுத்தவும் இந்த திட்டத்தைப் பயன்படுத்தி கொள்கிறோம் என்றார்.

“மாநில அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்களை இதன்வழி நாங்கள் விளம்பரப்படுத்த முடிகிறது. அதுமட்டுமில்லாமல், குடியிருப்பாளர்கள் தொகுதி அலுவலகத்தின் பிரதிநிதிகளைச் சந்திக்கும் வாய்ப்பையும் பெறலாம்,” என்று அவர் மேலும் கூறினார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரை செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் மூலம் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான சிலாங்கூர் குடியிருப்பாளர்கள் பயனடைந்தனர்.

ஆகவே, மாநில அரசு ஜனவரி 16 முதல் 1,200 இடங்களுக்கு மலிவு விற்பனை திட்டத்தை விரிவுபடுத்தியது.

மேலும், ரம்லான் மாதத்தின் இறுதி வாரத்தில், சிலாங்கூர் ஃபெடரல் (விவசாய) அக்ரிகல்சுரல் மார்கெட்டிங் (ஃபாமா) மற்றும் கூட்டுறவு வர்கா ஹிஜ்ரா சிலாங்கூர் பெர்ஹாத் (கோஹிஜ்ரா) ஆகியவற்றுடன் இணைந்து பிகேபிஎஸ் 23 இடங்களில் ஐடில்பித்ரி மெகா விற்பனையைப் பொதுமக்களின் சுமையைக் குறைக்க ஏற்பாடு செய்தது.

பொதுமக்கள் அவ்வப்போது விற்பனை இடங்களைப் பற்றிய அறிய linktr.ee/myPKPS என்ற இணைப்பைப் பார்வையிடலாம்.


Pengarang :