SELANGOR

2023 மீடியா சுற்றுலா நிகழ்வில் சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானில் உள்ள பல சுவாரஸ்யமான இடங்களுக்குப் பயணம்

கோம்பாக், மே 9: நேற்று முதல் எதிர்வரும் வியாழக்கிழமை வரை தகவல் துறை ஏற்பாடு செய்திருந்த 2023 மீடியா சுற்றுலா நிகழ்வில் செய்தி இணையத்தளங்கள் உட்பட 15 நிறுவனங்களைச் சேர்ந்த மொத்தம் 25 ஊடகப் பயிற்சியாளர்கள் கலந்துகொண்டனர்.

மீடியா மற்றும் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் இயக்குனர் டத்தோ இ சிவபாலன் கூறுகையில், 2005யில் அறிமுகப்படுத்தப்பட்ட 15 வது பதிப்பின் அமைப்பு சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானைச் சுற்றியுள்ள பல சுவாரஸ்யமான இடங்களை வலம் வருவதாகும்

“இந்த திட்டத்திற்கு இரண்டு மாநில அரசுகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றது. முதல் இரண்டு நாட்கள் சிலாங்கூரில் சுற்றுப்பயணம் செய்தோம், மற்ற இரண்டு நாட்கள் நெகிரி செம்பிலானில் கழிக்க உள்ளோம்.

“பங்கேற்பாளர்கள் தாங்கள் பார்வையிடும் பொழுதுபோக்கு பகுதியின் அனுபவத்தையும் உணர முடியும். அதில், ‘குகைப் பயணம்’, ‘சுவர் ஏறுதல்’, காடு வழியாக நடப்பது, ‘பேஸ் ஜம்ப்’ போன்றவை அடங்கும்,” என்றார்.

சிலாங்கூரில், கமுடா கோவ் டிஸ்கவரி பார்க், கோவ் ஏரோபார் மற்றும் கூஸ்பம்ப்ஸ் ரோப் கோர்ஸ் உள்ளிட்ட பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலா நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்த பிரபலமான பகுதிகளுக்குப் பங்கேற்பாளர்கள் அழைத்துச் செல்லப் பட்டதாகச் சிவபாலன் கூறினார்.

“அவர்கள் பாயா இந்தா டிஸ்கவரி வெட்லேண்ட்ஸ், ஸ்பிளாஸ் மேனியா வாட்டர் தீம் பார்க் மற்றும் இன்று குவா டாமாய் எக்ஸ்ட்ரீம் பூங்காவிற்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். இதற்குப் பிறகு, நெகிரி செம்பிலானுக்குப் புறப்படுவோம்,” என்றார்.


Pengarang :