SELANGOR

ஒரு மணி நேரத்திற்குள் 300 கோழிகள் விற்கப்பட்டு மக்களிடையே நல்ல வரவேற்பு

கோலா சிலாங்கூர், மே 9: ஈஜோக் தொகுதியில் நடைபெற்ற ஜெலாஜா எஹ்சான் ரக்யாட் (JER) நிகழ்ச்சியில் ஒரு மணி நேரத்திற்குள் 300 கோழிகள் விற்கப்பட்டு மக்களிடையே நல்ல ஆதரவைப் பெற்று உள்ளது.

நிதி மேலாளர் லீஸ் ஐடா ரம்லி கூறுகையில், முட்டை, அரிசி, மீன் மற்றும் இறைச்சி போன்ற பிற அடிப்படைப் பொருட்கள் குறுகிய காலத்தில் விற்கப்பட்டன.

“மலிவாக விற்கப்படும் ஆறு அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு வாய்ப்பை பெறுவதற்குக் குடியிருப்பாளர்கள் காலை 8 மணிக்கே வந்து வரிசையில் நிற்கிறார்கள் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

“இன்று அதிக எண்ணிக்கையிலான வருகையாளர்கள் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு நபருக்கும் ஒரு கோழி, ஒரு பலகை முட்டை மற்றும் ஒரு பேக்கட் இறைச்சி எனக் கட்டுப் படுத்தினோம், ஏனென்றால் நாங்கள் நியாயமாக இருக்க விரும்புகிறோம்.

இதன் மூலம், வருகையாளர்கள் யாரும் பொருட்கள் கிடைக்காமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறோம்,” என்று அவரைச் சந்தித்தபோது கூறினார்.

பொதுமக்கள் அவ்வப்போது விற்பனை இடங்களைப் பற்றிய அறிய linktr.ee/myPKPS என்ற இணைப்பைப் பார்வையிடலாம்.


Pengarang :