SELANGOR

கின்ராரா தொகுதி மலிவு விற்பனையில் ஒரு டன் காய்கறி, 200 காலணி இலவசமாக விநியோகம்

ஷா ஆலம், மே 10- கின்ராரா தொகுதியில் நேற்று முன்தினம் நடைபெற்ற
ஜெலாஜா ஏசான் ராக்யாட் மலிவு விற்பனையில் ஒரு டன் காய்கறிகளும்
நான்கு பெட்டி காலணிகளும் இலவசமாக வழங்கப்பட்டன.

பூச்சோங் ஜெயா, பாலாய் எம்.பி.எஸ்.ஜே.வில் நடைபெற்ற டாப்போர்
கின்ராரா எனும் இந்த நிகழ்வில் முதலில் வந்த 200 பேருக்கு இந்த
காய்கறிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன என்று தொகுதி உறுப்பினர் இங் ஸீ
ஹான் கூறினார்.

மக்கள் மத்தியில் ஆரோக்கியமான மற்றும் சமசத்து உணவின்
முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கில் வெண்டைக்காய், கடுகுக்கீரை,
வெள்ளரி, கங்கோங், பாகற்காய், தக்காளி, மிளகாய், பயிற்றங்காய்
உள்ளிட்ட காய்கறிகள் விநியோகம் செய்யப்பட்டன என்று அவர்
தெரிவித்தார்.

இது தவிர இந்நிகழ்வின் போது 200 ஜோடி வெள்ளை நிற காலணிகள்
வருகையாளர்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்டன என்றும் அவர்
குறிப்பிட்டார்.

பண்டார் கின்ராரா, ஜாலான் பிகே1/9பி எனுமிடத்தில் நேற்று நடைபெற்ற
மலிவு விற்பனையின் போது சொக்சோ எனப்படும் சமூகப் பாதுகாப்பு
நிறுவனத்தின் வாடிக்கையாளர் முகப்பிடமும் திறக்கப்பட்டு மக்களுக்கு
சேவை வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.


Pengarang :