SELANGOR

சிலாங்கூர் ஒற்றுமை தூதர் 2023 நிகழ்ச்சியில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு

ஷா ஆலம், 11 மே: மாநில அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட சிலாங்கூர் ஒற்றுமை தூதர் 2023 நிகழ்ச்சியில் பங்கேற்க பொதுமக்கள், குறிப்பாக மாநிலத்தில் உள்ள இளைஞர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

சமூகத்தில் ஒற்றுமை மற்றும் அமைதிக்கான தலைவர்களாக இளைஞர்களின் திறன்களையும் அறிவையும் வளர்ப்பதற்கு இந்த நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளதாக பொது சுகாதார எஸ்கோ டாக்டர் சித்தி மரியா மஹ்மூத் கூறினார்.

“ஒவ்வொரு சிலாங்கூர் மாநில சட்டமன்றத்திலும் பல்வேறு பின்னணியில் இருந்து 56 பிரதிநிதிகளை நாங்கள் தேடுகிறோம். இதன்வழி சமூகத்தில் உள்ள மத மற்றும் இன வேறுபாட்டை குறைக்க எண்ணம் கொண்டுள்ளோம்.

“பல்வேறு வெளிப்புறத் திட்டங்கள் மூலம், பல்வேறு சமூக பின்னணி மற்றும் வேறுபாடுகள் இடையே நிலவும் இடைவெளியை சுருக்கி அதில் ஒற்றுமையை உருவாக்குவதுடன், மேலும் நல்ல இணக்க சூழலை உருவாக்க விரும்பும் ஒற்றுமை தூதர்களையும் நாங்கள் தேடுகிறோம்,” என்று அவர் முகநூலில் கூறினார்.

இத்திட்டத்தின் மூலம் பங்கேற்பாளர்கள் ஜூன் 23 முதல் 25 வரை பயிற்சி முகாமில் பங்கேற்று புரிதல் மற்றும் தகவல் தொடர்பு முறையின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வார்கள் என்று டாக்டர் சித்தி மரியா தெரிவித்தார்.

பயிற்சி முகாமில் பங்கேற்ற பிறகு, பங்கேற்பாளர்களுக்கு ஜூன் 26 முதல் நவம்பர் 30 வரை அந்தந்த சமூக சேவை குழு களத் திட்டங்களை செயல்படுத்தும் பொறுப்புகள் வழங்கப்படும், ஆனால் அனைத்திலும்  ஒற்றுமை கூறுகள்  விதைக்கப் படுவதுடன்  ஒற்றுமை மேலோங்க பாடுபட வேண்டும்  என்று அவர் விளக்கினார்.

ஒவ்வொரு சிலாங்கூர் சமூகத் தூதரும் களத் திட்டங்களை செயல்படுத்த RM4,000 ஒதுக்கீடு பெறுவார்கள் என்றார்.

சிலாங்கூர் ஒற்றுமை தூதர் திட்டத்தின் இரண்டாவது தொடர் சிலாங்கூர் ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு கவுன்சிலால் பன்முகத்தன்மையின்  இணைந்து தொடங்கப்பட்டது.மேலும் தகவலுக்கு நீங்கள் https://aodmalaysia.org/duta-perpaduan-selangor ஐப் பார்வையிடலாம் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் வழியாக டோனாவைத் தொடர்புகொள்ளலாம்.


Pengarang :