SELANGOR

மின், மின்சார கழிவு பொருட்கள் சேகரிப்பு போட்டியில் பங்கேற்க  அம்பாங் ஜெயா நகராட்சி  அழைப்பு

ஷா ஆலம், மே 11: அம்பாங் ஜெயா நகராட்சி (எம்பிஏஜே) நடத்தும் மின், மின்சார கழிவு பொருட்கள் சேகரிப்பு போட்டியில் பங்கேற்க உள்ளூர் சமூகம் மற்றும் பள்ளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சமூகம், ஆரம்பப் பள்ளி மற்றும் இடைநிலைப் பள்ளி என மூன்று பிரிவுகளில் போட்டி உள்ளதாக உள்ளாட்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

“அம்பாங் ஜெயா மாநகராட்சியின் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறையால் நடத்தப்படும் இப்போட்டியில் ஒட்டுமொத்த வெற்றியாளர்களுக்கு RM1,000 பரிசாக வழங்கப்படும்.

மேலும், முதல் இடம் (RM1,000) மற்றும் இரண்டாம் இடம் (RM750) மூன்றாவது இடம் (RM500) மற்றும் ஆறுதல் பரிசாக (RM100) வழங்கப்படும்,” என்று அவர் முகநூல் மூலம் தெரிவித்தார்.

பங்கேற்பதற்கான இறுதி நாள் மே 31 மற்றும் மேலும் கேள்விகளுக்கு 03-42857007 அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

போட்டியில் பங்கேற்க விரும்புவோர் https://bit.ly/3HraGmH என்ற இணையத்தளத்தின் மூலம் படிவத்தைப் பூர்த்தி செய்யலாம்.

மின் கழிவு பொருட்கள் சேகரிப்பில் சேதமடைந்த, செயல்படாத, பழைய அல்லது காலாவதியான மின் மற்றும் மின்னணு பொருட்கள் அடங்கும்.

கடந்த ஆண்டு, அம்பாங் ஜெயா மாநகராட்சி நடத்திய சுற்றுச்சூழல் தினப் போட்டியின் மூலம் 12 டன் மின்னணுக் கழிவுகள் சேகரிக்கப்பட்டன. இதில் தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்கள் உட்பட 47 சமூகங்கள் ஏப்ரல் முதல் டிசம்பர் வரை பங்கேற்றன.


Pengarang :