ANTARABANGSA

டிவிட்டரின் புதிய தலைமைச் செயல்முறை அதிகாரி ஆறு வாரங்களில் நியமிக்கப்படுவார்- எலோன் மாஸ்க் அறிவிப்பு

வாஷிங்டன், மே 12- டிவிட்டரின் நிர்வாகத் தலைவர் பொறுப்பை தாம்
ஏற்கவுள்ளதால் அந்த சமூக ஊடகத்தின் புதிய செயல் முறை அதிகாரி
(சி.இ.ஒ.) இன்னும் ஆறு வாரங்களில் நியமிக்கப்படுவார் என்று எலோன்
மாஸ்க் தெரிவித்தார்.

தனது டிவிட்டர் பதிவில் இத்தகவலை வெளியிட்ட எலோன், அந்த பெண்
சி.இ.ஒ. இன்னும் ஆறு வாரங்களில் தனது பணியைத் தொடர்வார் என்று
குறிப்பிட்டார்.

பொருள், மென்பொருள் மற்றும் சியோசோப்களை மேற்பார்வையிடுவது
தனது புதிய பதவியின் முக்கிய பணியாக இருக்கும் என்று அவர் மேலும்
கூறியதாக யுனைடெட் பிரஸ் இண்டநேஷனல் செய்தி நிறுவனம் கூறியது.

டிவிட்டரின் நிதி மதிப்பு ஆறு மாதங்களுக்கு முன்னர் கொள்முதல்
செய்தபோது இருந்த 4,400 கோடி அமெரிக்க டாலரை விட இப்போது
பாதியாக குறைந்து விட்டதாக கடந்த மார் மாதம் மாஸ்க் வெளியிட்ட
மேமோ எனப்படும் உள் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

டிவிட்டரின் மதிப்பு சரிவு கண்டதற்கு அந்த சமூக ஊடக நிறுவனம் மீதான
எலோனின் தலைமைத்துவம் காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது.
அண்மைய காலமாக அவர் எடுத்த சில முடிவுகள் டிவிட்டர் பயனர்கள்
மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தியது.


Pengarang :