NATIONAL

சமூகத் தோட்டத்தை உருவாக்க எண்ணம் – அம்பாங் ஜெயா மாநகராட்சி

அம்பாங் ஜெயா, மே 16: அம்பாங் ஜெயா மாநகராட்சியின் (எம்பிஏஜே) குடியிருப்போர் குழு பகுதி 23 zon  (ஜேகேபி), இங்குள்ள ஜாலான் தெரதாய் 2/7, தாமான் புக்கிட் தெரதாயில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவிற்கு அடுத்துள்ள திறந்தவெளியில் சமூகத் தோட்டத்தை உருவாக்க உள்ளது.

“இந்தப் பகுதி கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக கைவிடப்பட்டதால், குடியிருப்பாளர்களுடன் சேர்ந்து சமூகத் தோட்டமாக இதை மேம்படுத்துவது நல்லது எனக் கவுன்சிலர் முஹம்மது சமத் கூறினார்.

“குடியிருப்பாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஜேகேபி சூன் 23 அம்பாங் ஜெயா மாநகராட்சியின் ஒத்துழைப்புடன் அப்பகுதியைச் சுத்தம் செய்து சரி செய்ய உள்ளது,” என்று அவர் கூறினார்.

இன்று 50க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களுடன் ஏடிஸ் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடத்தை ஒழிப்பதற்கான துப்புரவு திட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.

அம்பாங் ஜெயா மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொது சுத்திகரிப்பு துறை சேர்ந்த மொத்தம் 15 பணியாளர்கள் நான்கு ரோல் ஆன் ரோல் ஆஃப் (RORO) தொட்டிகள் மற்றும் ஒரு மண்வாரி இயந்திரத்தை பயன்படுத்தி குப்பைகள் மற்றும் ஸ்கிராப் மெட்டல்களை சுத்தம் செய்தனர்.

துப்புரவு பணி முடிந்த பின், சிறிய மலர் தோட்டம், மீன் குளம் உருவாக்கவும் மற்றும் குழந்தைகளுக்கான தோட்டக்கலை வகுப்புகளை நடத்தவும் முஹம்மது சமத் திட்டமிட்டுள்ளார்.


Pengarang :