SELANGOR

மலிவு விற்பனையில் இரண்டு மணி நேரத்திற்குள் 500 கோழிகள் விற்றுத் தீர்ந்தன

கோலா சிலாங்கூர், மே 17: புக்கிட் மெலாவத்தி தொகுதியின் (DUN) ஜெலாஜா எஹ்சான் ரக்யாட் (JER) நிகழ்வில் இரண்டு மணி நேரத்திற்குள் 500 கோழிகள் விற்றுத் தீர்ந்தன. இந்த திட்டம் அத்தொகுதி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் காலை 10.30 மணிக்கு சுராவ் அல்-ஃபலா, தாமான் சிரம்பையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

காலை 9 மணிக்கு முன்னதாகவே அடிப்படைத் தேவைக்கான பொருட்களை வாங்கப் பொதுமக்கள் காத்திருந்ததை கண்டதாகச்  சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பிகேபிஎஸ்) சொத்து மற்றும் வனவியல் பிரிவு அமலாக்க அதிகாரி முகமட் ஜாஹிரின் சே மான் கூறினார்.

“நாங்கள் 500 கோழிகள், 300 இறைச்சி பைகள், முட்டை, அரிசி, மீன் மற்றும் 150 எண்ணெய் பாட்டில்கள் கொண்டு வந்தோம். மதியம் 12 மணியளவில் கோழியும் இறைச்சியும் விற்று தீர்ந்தன.

“எனவே, விற்பனை நல்ல வரவேற்பை பெற்றது. ஐடில்பித்ரியை முன்னிட்டு இரண்டு நாட்கள் மிகப்பெரிய மானிய விலையில் கோழி மற்றும் முட்டைகளை விற்பனை செய்ததற்காக சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழக மலேசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸிலிருந்து (MBOR) அங்கீகாரத்தைப் பெற்றது.


Pengarang :