NATIONAL

போதைப் பொருள் வாங்குவதற்காக ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்த நபர் கைது

ஜெர்த்தே, மே 18- போதைப் பொருளை வாங்குவதற்காக வங்கி ஒன்றின்
துரித பணப்பட்டுவாடா இயந்திரத்தை (ஏ.டி.எம்.) உடைத்து பணத்தைக்
கொள்ளையிட முயன்ற ஆடவன் ஒருவனைப் போலீசார் நேற்று கைது
செய்தனர்.

தங்கள் வங்கியிலுள்ள பணத்தை செலுத்தும் மற்றும் மீட்கும்
இயந்திரத்தை உடைத்து திறப்பதற்கான முயற்சி
மேற்கொள்ளப்பட்டதற்கான அறிகுறி தென்பட்டது தொடர்பில்
சம்பந்தப்பட்ட வங்கியின் நிர்வாகத்தினரிடமிருந்து நேற்று முன்தினம்
மாலை 6.30 மணியளவில் தாங்கள் புகாரைப் பெற்றதாகப் பெசுட் மாவட்டப்
போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் அப்துல் ரோசாக் முகமது கூறினார்.

அந்த இயந்திரத்தின் முன்புறக் கதவை உடைத்து திறப்பதற்கான முயற்சி
மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும், அதிலிருந்து பணத்தை அந்த
சந்தேகப் பேர்வழியினால் எடுக்க முடியவில்லை என்று அவர் சொன்னார்.

அந்த வங்கியிலிருந்த இரகசிய கண்காணிப்பு கேமராவைச் சோதித்த போது,
மாலை 6.00 மணியளவில் பாதுகாப்பு சாதனம் அபாய ஒலி
எழுப்பியதையும் ஆடவன் ஒருவன் ஏ.டி.எம். இயந்திரத்தின் கதவை
நெம்பித் திறக்க முயல்வதையும் அதில் காண முடிந்தது என்றார் அவர்.

இதனைத் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்ட போலீசார் இங்குள்ள
கம்போங் புக்கிட் ரம்புதானில் உள்ள வீடொன்றில் 42 வயதுடைய அந்த
சந்தேகப் பேர்வழியைக் கைது செய்தனர் என்று அவர் மேலும்
குறிப்பிட்டார்.

அந்த ஆடவன் மீது குற்றச்செயல் மற்றும் போதைப் பொருள் தொடர்பில்
இரு குற்றப்பதிவுகள் இருப்பது தொடக்க க் கட்ட விசாரணையில் தெரிய
வந்துள்ளதாக கூறிய அவர், இச்சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 427வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.


Pengarang :