SELANGOR

கிள்ளான் ஆற்று நீர் பெருக்கத்தைத் தடுப்பதற்காக அதை ஆழப்படுத்தும் திட்டம்

ஷா ஆலம், 18 மே: கிள்ளான் ஆற்றில் நீர் பெருக்கத்தை தடுப்பதற்காக அதை ஆழப்படுத்தும் திட்டமானது வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் வாழும்  சுமார் 500,000  குடியிருப்பாளர்களுக்கு பயனளிக்கும்.

இந்தப் பகுதி தாமான் ஸ்ரீ மூடா, புக்கிட் லாஞ்சோங், கம்போங் தெங்கா மற்றும் கம்போங் பாரு ஹைகோம் ஆகியவற்றை உள்ளடக்கியது என லண்டாசான் லுமயான் (Landasan Lumayan Sdn Bhd) நிர்வாக இயக்குநர் சைஃபுல் அஸ்மென் நோர்டின் கூறினார்.

நவம்பர் 2021 இல் ஏற்பட்ட வெள்ளத்தின் போது கிள்ளான் ஆற்றினால் அதிக அளவு நீர் ஓட முடியாமல் போனதால் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது என்று அவர் விளக்கினார்.

“எனவே, குறைந்த பட்சம் ஐந்து மீட்டருக்கு அந்த ஆற்றை ஆழப்படுத்த வேண்டும், இதனால் தொழில்நுட்ப ரீதியாக கிள்ளான் ஆற்றின் கொள்ளளவு 40 சதவீதம் அதிகரிக்கும்.

” ஆற்றை ஆழப்படுத்தினால் தான் வெள்ளம் ஏற்படாது,” என்று அவர் சமீபத்தில் மீடியா சிலாங்கூருக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறினார்.

56 கி மீ நீளமுள்ள ஆற்றை உள்ளடக்கிய இந்த திட்டம் தாமான் ஸ்ரீ மூடா வில் தொடங்கி 10 கி மீ  அதிக  வெள்ள மிரட்டல்கள் உள்ள இடங்களை  உள்ளடக்கியதாக இருக்கும், அது  முற்றுப்பெற  மூன்று ஆண்டுகள் வரை ஆகும் என்று சைபுல் அஸ்மென் கூறினார்.

“ஆபத்தான பகுதிகளை நான்கு தொகுதிகளாக பிரிக்கிறோம். தாமான் ஸ்ரீ மூடா வில் நேரடி பாதிப்பை ஆராயும் சிறப்பு அறிக்கை உள்ளது.

அதன் காரணமாக நவம்பர் மாதத் தொடக்கத்தில் இத்திட்டம் தாமான் ஶ்ரீ மூடாவில் முதலில் தொடங்கவுள்ளோம் என்றார் அவர்.

மிட்வெலி, கோலாலம்பூர் முதல் போர்ட் கிள்ளான் வரையிலான 12 மண்டலங்களில் வெள்ள அபாயத்தைக் குறைக்க, கிள்ளான் ஆற்றின் கீழ் பகுதியை ஆழப்படுத்துதல் மற்றும் விரிவுபடுத்துதல் திட்டம் RM700 மில்லியன் செலவில் கடந்த ஆண்டு முதல் கட்டமாக மேற்கொள்ளப்படுகிறது.


Pengarang :