NATIONAL

கோடை காலத்தில் தர்பூசணிக்கு அமோக வரவேற்பு- தினசரி 24 டன் வரை விற்பனை

குவா மூசாங், மே 18- தற்போதைய கோடை காலத்தில் தர்பூசணியின்
விற்பனை வெகுவாக சூடுபிடித்துள்ளது. இங்குள்ள பண்டார் பாருவில்
அப்பழத்தின் விற்பனை தினசரி 24 டன் வரை அதிகரித்துள்ளது.

கடந்த மாதம் தொடங்கி தாம் பி கிரேட் சிவப்பு தர்பூசணியை கிலோ
எண்பது காசுக்கும் ஏ கிரேட் தர்பூசணியை வெ.1.20க்கும் விற்பனை செய்து
வருவதாக பழ வியாபாரியான ஜூஹாய்ரி ஹஷிம் (வயது 34) கூறினார்.

கிளந்தான் மற்றும் திரங்கானுவிலிருந்து மொத்தமாக வாங்கும்
காரணத்தால் இப்பழங்களை குறைந்த விலையில தாம் விற்பனை செய்து
வருவதாக அவர் சொன்னார்.

நான் இப்பழங்களை தோட்டத்திற்கே நேரில் சென்று வாங்குவதால்
பழங்களின் விலை குறைவாக உள்ளது. இந்நோக்கத்திற்காக நான்
கிளந்தான் மற்றும் திரங்கானுவின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம்
மேற்கொள்கிறேன் என்று அவ மேலும் குறிப்பிட்டார்.

தற்போது கோடை காலமாக உள்ளதால் இந்த தர்பூசணிக்கு வரவேற்பு
மிகுதியாக உள்ளது. தினசரி 12 முதல் 24 டன் வரையிலான பழங்களை
நான் விற்பனை செய்கிறேன் என அவர் தெரிவித்தார்.

காலை 8.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நடைபெறும் இந்த
வியாபாரத்தில் மனைவியும் குடும்ப உறுப்பினர்களும் தமக்கு துணையாக
உள்ளதாக அவர் மேலும் கூறினார்.


Pengarang :