SELANGOR

பொதுமக்கள் பெட்டாலிங் ஜெயா ஐடில்பித்ரி திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொள்ள கடுமையான மழை தடையாக இல்லை

பெட்டாலிங் ஜெயா, மே 20: கடுமையான மழையை  பொருட்படுத்தாது, நேற்று இரவு பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி ஏற்பாடு செய்திருந்த ஐடில்பித்ரி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியில் 10,000க்கும் மேற்பட்ட வருகையாளர்கள் கலந்து கொண்டனர்.

நிச்சயமற்ற வானிலையாக இருந்தபோதிலும் வருகையாளர்களின் ஆதரவைக் கண்டு மகிழ்ச்சி அடைந்ததாக  பெட்டாலிங் ஜெயா மேயர் முகமட் அஷான் எம்.டி அமீர் கூறினார்.

பெட்டாலிங் ஜெயா மாநகராட்சிக்கும்  உள்ளூர் சமூகத்திற்கும் இடையிலான உறவை
வலுப்படுத்தும் நோக்கத்துடன் ரியாங் ராயா@பெட்டாலிங் ஜெயா கொண்டாட்டம்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உள்ளூர் சமூகத்துடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதோடு, இந்த நாட்டில் உள்ள
பல்வேறு இனங்களின் நெருக்கமான உறவையும் மற்றும் ஒற்றுமையின்
அடையாளமாக வும் இது உள்ளது என்று அவர் கூறினார்.

மேலும் இந்நிகழ்வில் பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லீ செயன் சுங்,
புக்கிட் காசிங் மாநில சட்டமன்ற உறுப்பினர் (ADN) ஆர் ராஜீவ்,  ஶ்ரீ செத்தியா  மாநில சட்டமன்ற உறுப்பினர் ஹலிமே அபு பக்கர் மற்றும்  தாமான் மேடன்   மாநில சட்டமன்ற உறுப்பினர்   சியாம்சுல் பிர்தௌஸ் முகமட் சுப்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

சாத்தே, ஆடு வறுவல், ரோஜாக் பசம்போர், மீ பண்டோங், சார் கொய்டியாவ், நாசி
லெமாக், முர்தபாக், லெமாங், கெத்துபாட், பலகாரங்கள், செண்டோல் மற்றும் அப்பம்
பாலிக் உட்பட மொத்தம் 40 வகையான உணவுகள் பரிமாறப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 1,000 குழந்தைகளுக்கு முகமட் அஸ்ஹான் டுயட் ராயா வழங்கினார். கலைஞர்களின் நிகழ்ச்சியும் வருகையாளர்களை மகிழ்வித்தது.


Pengarang :