NATIONAL

மக்களிடையே ஒற்றுமையை ஊக்குவிக்கும் ‘ஒற்றுமை வாரம்’

கோலாலம்பூர், மே 22: இந்த நாட்டின் மக்களிடையே  ஒற்றுமையை  வளர்ப்பதற்கான ஒற்றுமை வாரத்தை ஏற்பாடு செய்வது மிகவும் முக்கியம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

அதுமட்டுமின்றி ஒற்றுமை வாரத்தின் மூலம் மலேசியர்களுக்கு தேசபக்தியை  புகட்டும் தேசியப் பிரிவுகள் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை தொடர்பான அறிவு, புரிதல் மற்றும் போற்றுதல் போன்று கூறுகளைப் பரப்ப முடியும் என்று அவர் கூறினார்.

கூச்சிங்கில் நேற்று நடைபெற்ற தேசிய அளவிலான ஒருமைப்பாட்டு வார விழாவில் கலந்து கொண்டதாக முகநூல் பக்கத்தில் பிரதமர் தெரிவித்துள்ளார்.

‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வு  யாங் டி-பெர்துவான் அகோங் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தபா பில்லாஹ் ஷா அவர்களால் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கப்பட்டது.

இந்த இணக்கமான விழாவில் சரவாக் மாநிலத் தலைவர் துன் அப்துல் தைப் மஹ்மூட், சரவாக் பிரதமர் டான்ஸ்ரீ அபாங் ஜோஹாரி துன் ஓபேங் மற்றும் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசோப் மற்றும் அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

இந்த ஒற்றுமை வாரம் மே 20 முதல் 28 வரை பினாங்கில் உள்ள டதாரான் பெர்தாம், சபாவில் உள்ள மஸ்யராகத் பாப்பர் மண்டபம் , ஜொகூரில் உள்ள டதாரான் தாசிக் குளுவாங் மற்றும் பஹாங்கில் உள்ள குவாந்தான் பான்தாய் பலோக் பொழுதுபோக்கு மையம் உள்ளிட்ட 15 இடங்களில் நடைபெறும்.

– பெர்னாமா


Pengarang :