NATIONAL

சீ போட்டியில் 46 பதக்கங்களை வென்ற சிலாங்கூர் குழுவுக்கு எம்.எஸ்.என். வாழ்த்து

ஷா ஆலம், மே 23- அண்மையில் கம்போடியாவில் நடந்து முடிந்த சீ
போட்டியில் மலேசிய குழுவுக்கு 46 பதக்கங்களைப் பெற்றுத் தந்த
சிலாங்கூர் மாநில விளையாட்டாளர்களுக்கு சிலாங்கூர் விளையாட்டு
மன்றம் (எம்.எஸ்.என்.) வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டது.

இந்த அடைவு நிலையை சரி செய்து கொள்வதன் மூலம்
வருங்காலங்களில் நிர்ணயிக்கப்பட்ட பதக்க இலக்கை அடைய முடியும்
என்று எம்.எஸ்.என். நிர்வாக இயக்குநர் முகமது நிஸாம் மர்ஜூக்கி
கூறினார்.

ஈராண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்தப் போட்டியில் 6 தங்கம், 16
வெள்ளி மற்றும் 24 வெண்கலப்பதக்கங்களை சிலாங்கூர்
விளையாட்டாளர்கள் பெற்றதாக அவர் சொன்னார்.

புதுமுகங்கள் உள்பட இந்த போட்டியில் பங்கேற்ற மாநில
விளையாட்டாளர்களில் ஏறக்குறைய அனைவரும் பதக்கத்தைப் பெற்றுத்
தந்துள்ளனர். புதியவர்கள் அடுத்த ஆண்டுகளில் நடைபெறும் போட்டிகளில்
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்குரிய வாய்ப்பு உள்ளது என
அவர் குறிப்பிட்டார்.

பந்தெறியும் போட்டியில் சைபுல் பாஹ்ரி முசிம், கராத்தே போட்டியில்
ஆர்.ஷர்மேந்திரன், சி. ஷாமளராணி, கோல்ப் போட்டியில் இங் ஜிங்
ஷூவான் மற்றும் ஹாக்கி குழுவின் ஆறு ஆட்டக்காரர்கள் மூலம்
சிலாங்கூர் ஆறு தங்கப்பதக்கங்களைப் பெற்றது.

கராத்தே போட்டியின் 75 கிலோக்கு கீழ்ப்பட்ட குமித்தே பிரிவில் நான்கு
முறை தொடர்ச்சியாகத் தங்கம் வென்று ஷர்மேந்திரன் சாதனைப்
புரிந்துள்ளதாக முகமது நிஸாம் தெரிவித்தார்.


Pengarang :