NATIONAL

தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய ஊராட்சி,மற்றும் தீயணைப்பு துறையுடன் இணைந்து சேமநிதி வாரியம் மற்றும் பசிபிக் நிறுவனம்  ஆய்வு

கோலாலம்பூர், மே 23 – ஊழியர் சேமநிதி வாரியம் (EPF) மற்றும் பசிபிக் சீனியர் லிவிங் (பசிபிக்) ஆகியவை உள்ளூர் அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையுடன் இணைந்து பெட்டாலிங் ஜெயா வில் உள்ள ஊழியர் சேமநிதி வாரிய கட்டிடத்தின் தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிந்து அதன் சேதத்தையும் மதிப்பீடு செய்கின்றன.

ஏப்ரல் 6, 2022 அன்று ஊழியர் சேமநிதி வாரியத்துடன் 30 வருட குத்தகைக்குக் கையெழுத்திட்ட பிறகு, ஜாலான் காசிங் கில் உள்ள அக்கட்டிடத்தை புதுப்பிக்கும் பணியை பசிபிக் டெவலப்பர் மேற்கொண்டு வருவதாக ஊழியர் சேமநிதி கார்ப்பரேட் விவகாரங்கள் துறை நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. .

பசிபிக் அதன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு கட்டிடத்தின் உள்ளே இடிக்கும் பணியைத் தொடங்கியுள்ளதாக அவர் கூறினார்.

நேற்று காலை நடந்த இந்த தீ விபத்தில், கட்டிடத்தின் நான்காவது மற்றும் ஐந்தாவது மாடிகள் மட்டுமே பாதிக்கப்பட்டன மற்றும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு இதே போன்ற ஒரு சம்பவத்திற்குப் பிறகு அக்கட்டிடம் தீப்பிடித்தது இது இரண்டாவது முறையாகும்.

தீயைக் கட்டுப்படுத்துவதில் தீயணைப்பு வீரர்கள் விரைவான செயலுக்கு ஊழியர் சேமநிதி கார்ப்பரேட் விவகாரத்துறை அதன் பாராட்டுகளைத் தெரிவித்தது.

– பெர்னாமா


Pengarang :