NATIONAL

20 மீட்டருக்கும் அதிகம் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் தவறி விழுந்த நபர் இறந்தார் – கெத்திங் ஹைலேண்ட்ஸ்

குவாந்தான், மே 24: நேற்று கெத்திங் ஹைலேண்ட்ஸ் செல்லும் வழியில் கிலோமீட்டர் 1 இல் 20 மீட்டருக்கும் அதிகம் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் தவறி விழுந்த நபர் ஒருவர் இறந்ததாக நம்பப்படுகிறது.

60 வயதுடைய அந்நபர், மலைப்பாதையில் குழாய் பதிக்கும் பணியை பார்க்கும் சமயத்தில் தவறி விழுந்ததாக கெத்திங் ஹைலேண்ட்ஸ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் முகமட் சௌபி ஜகாரியா கூறினார்.

பிற்பகல் 2.53 மணி அளவில் இச்சம்பவம் குறித்து அவசர அழைப்பு வந்ததை அடுத்து, எட்டு உறுப்பினர்களும் மற்றும் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் கூறினார்.

“மதியம் 3.30 மணியளவில் தீயணைப்பு வீரர்கள் அந்த சடலத்தை கண்டு பிடித்தனர். பின்னர், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கயிறுகள் மற்றும் ஸ்ட்ரெச்சர்களைப் பயன்படுத்தி உடலைத் தூக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டது ,” என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

மேல் நடவடிக்கைகளுக்காகச் சடலம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட தாகவும், மாலை 5 மணியளவில் நடவடிக்கை முழுமையாக நிறைவடைந்த தாகவும் அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :