NATIONAL

இ.பி.எஃப். கட்டிட தீச்சம்பவத்திற்குக் குற்றச் செயல் காரணமல்ல- காவல்துறை விளக்கம்

பெட்டாலிங் ஜெயா, மே 24- இங்கு ஜாலான் காசிங்கில் அமைந்துள்ள
ஊழியர் சேம நிதி வாரியத்தின் பழைய கட்டிடத்தில் தீவிபத்து
ஏற்பட்டதற்குக் குற்றச் செயல் காரணமல்ல என்று காவல் துறை
தெளிவுபடுத்தியது.

இச்சம்பவம் தொடர்பில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின்
தடயவியல் அறிக்கைக்காக தாங்கள் காத்திருப்பதாக பெட்டாலிங் ஜெயா
மாவட்டப் போலீஸ் தலைவர் ஃபக்ருடின் அப்துல் ஹமிட் கூறினார்.

இந்த தீச்சம்பவத்திற்குக் குற்றப் பின்னணி இருப்பதற்கான தடயம்
எதனையும் இதுவரை நாங்கள் கண்டுபிடிக்கவில்லை. தடயவியல்
அறிக்கை கிடைத்தப் பின்னரே இதன் தொடர்பில் அடுத்தக் கட்ட
நடவடிக்கையை மேற்கொள்வோம் என அவர் தெரிவித்தார்.

பெட்டாலிங் ஜெயாவில் அமைந்துள்ள இந்த பழைய இ.பி.எஃப்.
கட்டிடத்தில் நேற்று முன்தினம் தீவிபத்து ஏற்பட்டது. இதே போல் கடந்த
2018ஆம் ஆண்டு பிப்வரி மாதமும் இக்கட்டிடத்தில் தீச்சம்பவம் ஏற்பட்டது
என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தீச்சம்பவம் தொடர்பில் காலை 10.39 மணியளவில் தங்களுக்குத்
தகவல் கிடைத்ததாகவும் ஆறு நிடங்களில் சம்பவ இடத்தை அடைந்து
தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதாகவும் சிலாங்கூர் மாநிலத்
தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை பிரிவு துணை
இயக்குநர் ஹபிஷாம் முகமது நோர் கூறினார்.


Pengarang :