NATIONAL

கோரப்படாதப் பணம்  தொடர்பில மக்களவை கூட்டத்தில் இன்று விவாதம்

கோலாலம்பூர், மே 24 –  நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் மூன்றாவது நாளான இன்று
இவ்வாண்டு மார்ச் மாதம்  31ஆம் தேதி வரை கோரப்படாமல் இருந்து வரும்  பணம்  குறித்து   விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.

மேலும், கோரப்படாத இந்த நிதியை  நாட்டின் மேம்பாட்டிற்கு பயன்படுத்துவது தொடர்பான  பரிந்துரைகளும் விவாதிக்கப்படும் என நாடாளுமன்ற அகப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இன்றை ய கூட்ட நிகழ்ச்சி நிரலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புக்கிட் பிந்தாங் தொகுதி பக்காத்தான் ஹராப்பான் நாடாளுமன்ற உறுப்பினரான   ஃபோங் கூய் லுன்   இது குறித்த வினாவை நிதியமைச்சரும் பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம்   எழுப்பவுள்ளார்.
.
நாட்டிற்கு பொற்காலமாக விளங்கிய 1980 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளின்
மேன்மை மற்றும் உயரிய அந்தஸ்தை மீண்டும் கொண்டு வருவதற்கு அரசாங்கம்
மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து குபாங் பாசு தொகுதி பெரிக்கத்தான்
உறுப்பினர் டத்தோ டாக்டர் கூ அப்துல் ரஹ்மான் கூ இஸ்மாயில் கேள்வி
எழுப்புவார்.

உயர்கல்விக் கூட மாணவர்கள் தங்களின் பணிநிமித்தப் பயிற்சியைப் பெறும்
போது அவர்களுக்கு உரிய அலவன்ஸ் தொகை வழங்குவதில் முதலாளிகளுக்குக்
குறிப்பாக தனியார் துறையினருக்கு உதவும் நோக்கில் சிறப்பு நிதியை
உருவாக்கும் திட்டம் அரசாங்கத்திற்கு உள்ளதா என்று உலு லங்காட் தொகுதி
ஹராப்பான் உறுப்பினர் முகமது சானி ஹம்சான் மனித வள அமைச்சிரிடம்
கேள்வி எழுப்பவுள்ளார்.

இவை தவிர, திவால் தொடர்பான சட்டத் திருத்தங்கள்  மீதான விவாதங்களும் இன்று
நாடாளுமன்றத்தில் நடைபெறும்


Pengarang :