SELANGOR

லுவாஸின் விரைவான நடவடிக்கையால் செமினி நீர் சுத்திகரிப்பு நிலையத்தில்  நீர்  விநியோக இடைநிறுத்தம்  தவிர்க்கப்பட்டது

ஷா ஆலம், மே 24: சுங்கை லங்காட் ஆற்றில் நீர்  மாசுபாட்டைக் கட்டுப்படுத்த சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியத்தின் (லுவாஸ்) விரைவான நடவடிக்கையால் செமினி நீர்  விநியோக இடைநிறுத்தம்  தவிர்க்கப்பட்டது.

அதிகாரிகளுடன் சேர்ந்து, கம்போங் செசபன் கெலுபி, பெரானாங்கில் உள்ள பல வளாகங்கள் குறித்து பொதுமக்களிடம் இருந்து லுவாஸ் தகவல்களைப் பெற்றுள்ளது என சுற்றுச்சூழல் பொறுப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.

அத்தகவல்களின் அடிப்படையில், ஒரு தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் தண்ணீர் அருகாமையில் உள்ள நதியில் பாய்ந்து, அந்த இடத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள காபூல் நதியைப் பாதிக்கும் சாத்தியம் இருப்பது கண்டறியப்பட்டது என்றார்.

வளாகத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர், பிளாஸ்டிக் மறுசுழற்சி செயல்முறை நீர் மற்றும் அப்பகுதியில் துர்நாற்றம் வீசக் காரணமாக உள்ளது என்று சந்தேகிக்கப்படுகிறது.

“சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய சந்தேகத்திற்கிடமான அக் கழிவு நீரை சேகரிக்கும் முறை எதுவும் இல்லை என்பதையும் சோதனைகள் காட்டுகின்றன,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, லுவாஸ் 999 ஆம் ஆண்டின் லுவாஸ் சட்டப் பிரிவு 121(1) இன் கீழ் கழிவுநீர் வெளியேற்றத்தை உடனடியாக நிறுத்தவும் மற்றும் உடனடியாகச் சுத்தம் செய்யவும் வளாகத்திற்கு அறிவுறுத்தல் கடிதத்தை அந்நிறுவனம் வழங்கியதாக லோய் சியான் கூறினார்.

அதிக அளவு கழிவு நீர் உற்பத்தியாகி, மாசு ஏற்படுத்தும் அபாயம் உள்ளதால் தொழிற்சாலையின் உரிமையாளருக்கு அப்பகுதியை மீட்டெடுக்க உத்தரவிடப்பட்டது.

“நீண்ட காலத்திற்கு அதிக அளவு கழிவு நீர் வெளியேறினால் அ தொழில்சாலையின் கீழ்நோக்கி 17 கிமீ தொலைவில் உள்ள செமினி நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் வேலை நிறுத்தம் ஏற்படும் அபாயம் உள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.


Pengarang :