SELANGOR

வெள்ளத்தைத் தடுக்கும் முயற்சியாகத் தாமான் பூங்கா இண்டாவில் கால்வாய் துப்புரவுப் பணி

ஷா ஆலம், மே 25- ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர் வீ. பாப்பாராய்டு
முயற்சியில் இங்குள்ள செக்சன் 32, தாமான் பூங்கா இண்டாவில்
கால்வாய் துப்புரவு செய்யப்பட்டது.

மழைகாலங்களில் இப்பகுதியில் ஏற்படும் திடீர் வெள்ளப் பிரச்சனைக்குத்
தீர்வு காணும் பொருட்டு தனியார் நிலத்தில் அமைந்துள்ள அந்த
கால்வாயை துப்புரவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டதாக ராய்டு
கூறினார்.

இந்த கால்வாய்பு துப்புரவுப் பணி ஷா ஆலம் மாநகர் மன்றத்தின்
பொறியியல் துறையின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டதாக அவர்
தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளத்தைத் தடுப்பதற்கான தற்காலிக நடவடிக்கையாக இந்த துப்புரவுப்
பணி மேற்கொள்ளப்பட்டதாக கூறிய அவர், புக்கிட் கெமுனிங்
சாலையிலுள்ள பிரதான கால்வாய் விரிவுபடுத்தப்பட்டவுடன் இப்பகுதியில்
வெள்ளப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும் என்றார்.

புக்கிட் கெமுனிங் சாலையில் மேற்கொள்ளப்படவிருக்கும் கால்வாய்
விரிவாக்கப் பணிகள் குறித்து கோத்தா கெமுனிங் தொகுதி சட்டமன்ற
உறுப்பினரும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான வீ.கணபதிராவ்
என்னிடம் தெரிவித்துள்ளார்.

இவ்வட்டார மக்களின் நலன் மீது பரிவு கொண்டு இந்த திட்டத்தை
முன்னெடுத்துள்ள ஒற்றுமை அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துக்
கொள்கிறேன் என்றார் அவர்.

இதனிடையே, ஷா ஆலம் மாநகரின் தோற்றத்திற்கு களங்கத்தை
ஏற்படுத்தும் வகையில் ஆங்காங்கே காணப்படும் சட்டவிரோத வட்டி
முதலைகளின் விளம்பரப் பதாகைகளை அகற்றும்படி தாம் மாநகர்
மன்றத்தைக் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் ராய்டு குறிப்பிட்டார்.


Pengarang :