NATIONAL

டிவிட்டர் வழி ஆட்சியாளர்களை அவமதிக்கும் மற்றும் இனத்துவேஷ கருத்துகளை வெளியிட்ட ஆடவர் கைது

கோலாலம்பூர், மே 26-   டிவிட்டர் பதிவுகளின்  மூலம் அரச அமைப்பைச்  சிறுமைப்படுத்தியது   மற்றும் இன துவேசத்தை ஏற்படுத்த முயன்றது தொடர்பில்  சந்தேகப் பேர்வழி ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

இருபத்தேழு வயதுடைய அந்த   நபர் சிரம்பானில் நேற்று கைது
செய்யப்பட்டதாக அரச மலேசிய போலீஸ் படையின்   செயலாளர் நோர்ஷியா
சாடுடின் தெரிவித்ததார்.

அந்த ஆடவரிடமிருந்து ஒரு கைப்பேசி மற்றும் இரு சிம் கார்டுகள் பறிமுதல்
செய்யப்பட்டதாக நேற்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் கூறினார்.

1948 ஆம் ஆண்டு நிந்தனை சட்டத்தின்    4ஆவது  உட்பிரிவு 1 இன்  கீழ் மற்றும்  1998ஆம் ஆண்டு தொடர்பு பல்லூடக  சட்டத்தை தவறாக யன்படுத்தியது தொடர்பில் அவ்வாடவருக்கு எதிராக போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக  அவர் கூறினார்.

கைதான அந்த ஆடவர் நேற்று தொடங்கி வரும் சனிக்கிழமை வரை  மூன்று
நாட்களுக்கு விசாணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக  நோர்ஷியா குறிப்பிட்டார்.

சமூக ஊடகங்களை பொறுப்புடனும் மிகுந்த கவன் போக்குடனும் பயன்படுத்த
வேண்டும் என்பதோடு பொது மக்கள் மத்தியில் அச்சத்தையும் குழப்பத்தையும்
ஏற்படுத்தக்கூடிய குறிப்பாக 3ஆர் எனப்படும் இன, சமய மற்றும் அரச
அமைப்புக்கு எதிரான பதிவுகளை வெளியிடுவதை தவிர்க்கும்படியும் பொது
மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :