SELANGOR

மறுசுழற்சிப் பொருள்களுக்கு மாற்றாக ரொக்கம் பெற உதவும் இயந்திரம்- எம்.பி.ஏ.ஜே. அறிமுகப்படுத்தியது

ஷா ஆலம், மே 26- மறுசுழற்சிப் பொருள்களுக்கு மாற்றாக ரொக்கம் பெற
உதவும் இயந்திரத்தை அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் (எம்.பி.ஏ.ஜே.)
அறிமுகப்படுத்தியுள்ளது. ரிவர்ஸ் வெண்டிங் மிஷின் (ஆர்.வி.எம்.) எனும்
இந்த இயந்திரம் நகராண்மைக் கழக தலைமையகத்தின் வரவேற்புக்
கூட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது.

மினரல் பிளாஸ்டிக் போத்தல்கள், அலுமினியம் டின்கள், பான அட்டைப்
பெட்டிகள் உள்ளிட்டப் பொருள்களை இந்த இயந்திரம் பெற்றுக் கொள்ளும்
என்று நகராண்மைக் கழகத்தின் பொது உறவுப் பிரிவு கூறியது.

மறு சுழற்சி செய்து வெகுமதியைப் பெறுங்கள் எனும் கோட்பாட்டிலான
இந்த இந்த திட்டத்தில் பங்கேற்போர் இயந்திரத்தில் இடும் மறுசுழற்றிப்
பொருள்களுக்குரிய தொகையை அந்த பொருள்களில் உள்ள கியூஆர்
குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் தங்கள் வங்கிக் கணக்கில் வரவு
வைத்துக் கொள்ள முடியும் என அது தெரிவித்தது.

கடந்த மார்ச் 22ஆம் தேதி இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது முதல்
இதுவரை 4,378 பொருள்கள் சேகரிக்கப்பட்டு அதற்குண்டானத் தொகையாக
வாடிக்கையாளர்களுக்கு 178 வெள்ளி வழங்கப்பட்டுள்ளது என அப்பிரிவு
அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.

பொது மக்கள் குறிப்பாக அம்பாங் வட்டாரவாசிகள் இந்த இயந்திரத்தைப்
பயன்படுத்தி பொருள்களை மறுசுழற்சி செய்து ரொக்கப் தொகையைப்
பெற்றுக் கொள்ளுமாறு நகராண்மைக் கழகம் கேட்டுக் கொண்டது.


Pengarang :