SELANGOR

புற்று நோய் அறிகுறியை முன்னதாகக் கண்டறிய அரசின் இலவச பரிசோதனையில் பங்கேற்பீர்- மகளிருக்கு அறிவுறுத்து

கெப்பளா பாத்தாஸ், மே 30-  பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு பெண்களுக்கு அரசு வழங்கும் மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான இலவச ஆரம்ப பரிசோதனைகளை மேற்கொள்ள பெண்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

இந்த இரண்டு வித புற்று நோய்கள் தொடர்பான சோதனைகளை தவிர்க்கும் பெண்களின்
புள்ளிவிவரங்களைக் குறைக்க தேசிய மக்கள்தொகை மற்றும் குடும்ப மேம்பாட்டு வாரியம்  மூலம் திரட்ட அமைச்சு தொடர்ந்து முயற்சி மேற்கொள்கிறது என்று அதன் துணை அமைச்சர் அய்மன் அதிரா சாபு கூறினார்.

அன்னையர் தினத்தை கொண்டாடும் வகையில் மே மாதம் முழுவதும் இந்த இரண்டு வித புற்று நோய்சோதனைகளோடு (மேமோகிராம் மற்றும் எச்பிடி டிஎன்ஏ சோதனை) பிஎம்ஐ, இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் குளுக்கோஸ் சோதனைகள் தகுதியுள்ள அனைத்து பெண்களுக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது என்றும் அவர் சொன்னார்.

மே மாதத்திற்குப் பிறகு ஆண்டு இறுதி வரை மேமோகிராம் மற்றும் எச்பிவி டிஎன்ஏ சோதனைகள் இலவசமாக தொடரும் என்று அவர் நேற்று இங்கு “பெண்கள் நலன் கருத்தரங்கு: பெண்களின் புற்றுநோய் மற்றும் வாழ்க்கை முறை“ எனும் கருத்தரங்கைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

தேசிய மக்கள் தொகை மற்றும் குடும்ப மேம்பாட்டு வாரியம் இந்த மேமோகிராம்
சோதனை மானியத் திட்டத்தை 2007 முதல் நடத்தி வருவதாகவும் இதன் மூலம் இவ்வாண்டு
ஏப்ரல் 2023 வரை பினாங்கில் உள்ள 47,166 பெண்கள் பயனடைந்துள்ளனர் என்றும் அவர்
தெரிவித்தார்.

எச்பிவி டிஎன்ஏ முறையிலான கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனைத் திட்டம்
கடந்த 2019 முதல் செயல்படுத்தப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாத நிலவரப்படி பினாங்கில்
2,867 பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர் என்றார் அவர்.


Pengarang :