NATIONAL

ஊடகத்துறையினர் கடமையில் காட்டும்  அர்ப்பணிப்பை அங்கிகரிக்கும் வண்ணம்  அவர்கள்  கண்ணியத்தை  காக்க  அமைச்சர்  உறுதி 

ஈப்போ, மே 30: ஊடகவியலாளர்களின் கண்ணியத்தை காப்பதுக்கும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை எளிதாக்குவதற்கும்  உதவ தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார் தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில்.

தனது முகநூல் பக்கத்தில், ஊடக ஆர்வலர்களுக்கு தேசிய பத்திரிக்கையாளர் தின (ஹவானா) வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட ஃபஹ்மி, கடந்த டிசம்பரில் சிலாங்கூர், பத்தாங் காலி நிலச்சரிவின் போது ஊடகங்கள் அயராது உழைத்த நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார்.

அந்த சம்பவத்தைப் பொதுமக்களுக்கு தெரிவிப்பதற்காக ஊடகவியலாளர்கள் மேற்கொண்ட அசாதாரண முயற்சிகளை தியாகங்களை தான் நேரில் கண்டதாக ஃபஹ்மி கூறினார்.

“அப்போது, அங்கிருந்த நிலைமையை  உடனுக்குடன் மக்களுக்கு தெரிவிக்க ஊடகவியலாளர்கள் மேற்கொண்ட  பல்வேறு முயற்சிகளை  அசாதாரன தியாகத்தை நானே பார்த்தேன்,” என்றார்.

“சுதந்திர ஊடகம், ஜனநாயகத்தின் தூண்” என்ற ஹவானா 2023 கருப்பொருளைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று இங்குள்ள மேரு ராயாவில் உள்ள கேசுவரினா கன்வென்ஷன் சென்டரில் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

மே 29, 1939 அன்று உத்துசான் மிலாயு நாழிதளிலின் முதல் பதிப்பு வெளியீடு கண்ட நாளை, தேசிய பத்திரிகையாளர்கள் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

– பெர்னாமா


Pengarang :