NATIONAL

ஹரி ராயா ஐடில் ஹடா கொண்டாட்டத்திற்குப் போதுமான சர்க்கரை விநியோகம்  உள்ளது

கோலா திரங்கானு, மே 30: ஜூன் மாத இறுதியில் ஹரி ராயா ஐடில் ஹடா கொண்டாட்டத்திற்குப் போதுமான சர்க்கரை  உள்ளது என உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் (கேபிடிஎன்) உறுதி அளித்துள்ளது.

நாட்டின் இரண்டு பெரிய தொழிற்சாலைகள் “Central Sugar Refinery Sdn Bhd (CSR)` மற்றும் `MSM Malaysia Holdings Bhd (MSM)“ ஆகிய இரண்டும் மொத்த விற்பனையாளர்களுக்கு விநியோகிக்க வழக்கம் போல் சர்க்கரையை உற்பத்தி செய்ய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாகத் துணை அமைச்சர் பவுசியா சாலே கூறினார்.

“இரண்டு தொழிற்சாலைகளுக்கும் வழக்கமான சர்க்கரை விநியோகம் முறையே 24,000 மற்றும் 18,000 மெட்ரிக் டன்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“நாங்கள் உற்பத்தி கட்டுப்பாட்டு வழிமுறைகளையும் வழங்கினோம், இதன்வழி தொழிற்சாலை எவ்வளவு சர்க்கரை உற்பத்தி செய்கிறது மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கு எவ்வளவு அனுப்பப்படுகிறது என்பதை நாங்கள் சரிபார்க்கலாம்,” என்று அவர் இன்று இங்குள்ள ஒரு சர்க்கரை மொத்த விற்பனை நிறுவனத்திற்கு வருகை புரிந்து பிறகு கூறினார்.

கடந்த ரமலான் மாதத்தின் இறுதியில் திரங்கானுவில் ஏற்பட்டதாக கூறப்படும் சர்க்கரை பற்றாக்குறையைப் பிரச்சனையைக் கண்காணிக்க அவர் வருகை புரிந்துள்ளார்.

கூடுதலாக, பண்டிகை காலத்திற்கு முன்பே போதுமான சர்க்கரை இருப்பதை உறுதி செய்வதற்காக KPDN நேற்றுடன் முடிவடைந்த “Op Manis“ காலத்தை ஜூன் 30 வரை நீட்டித்துள்ளது என்று பவுசியா கூறினார்.

முன்னர் கிளந்தான் மற்றும் திரங்கானுவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பல மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட புகார்களின் காரணமாக நாடு முழுவதும் விரிவுபடுத்த பட்டுள்ளன.

சந்தையில் சர்க்கரை விநியோகச் சங்கிலியைப் பாதிக்கும் வகையில் அதிக அளவில் கொள்முதல் செய்ய வேண்டாம் என்று நுகர்வோர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

– பெர்னாமா


Pengarang :