NATIONAL

மூல நீர் வழங்கல் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா – மந்திரி புசார் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்

கோலா லங்காட், மே 30: இன்று கம்போங் ஶ்ரீ  சீடிங், பந்திங்கில் உள்ள மூல நீர்
வழங்கல் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவை டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரி அவர்கள் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.

இந்த நீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான திட்டத்தில் இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல்
மற்றும் வானிலை மாற்றம் அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹமட், உள்கட்டமைப்பு மற்றும்
பொது வசதிகள் பொறுப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் ஐ.ஆர் இஷாம் அசிம் மற்றும்
பெங்குருசான் ஆயரின் செயல் தலைமை நிர்வாக அதிகாரி ஐ.ஆர் அபாஸ் அப்துல்லா
ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சிலாங்கூர் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள மொத்தம் 9 மில்லியன் மக்களை
உள்ளடக்கிய நீர் விநியோகத்தை உறுதி செய்வதற்கான கூடுதல் முயற்சியாக இந்தத்
திட்டம் உள்ளது என்று இவ்விழாவில் பேசிய அமிருடின் தெரிவித்தார்.

புதிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமானமானது சிலாங்கூர் நீரின் செயல்பாடு
மற்றும் நிர்வாகத்திற்கான ஒரு முக்கியமான வரலாற்றைக் குறிக்கிறது.

இது மாநிலத்திற்கும் நாட்டிற்கும் நீர் வழங்கலில் நிலையான தன்மையை உறுதி
செய்வதற்கான மாநில அரசின் முயற்சியாகும்; என்று அவர் கூறினார்.

ராசாவ் நீர் வழங்கல் திட்டமானது சுங்கை ராசாவ் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் (எல்ஆர்ஏ)
கட்டுமானம் மற்றும் நீர் விநியோக அமைப்பு ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

நாளொன்றுக்கு சுமார் 700 மில்லியன் லிட்டர் (JLH) சுத்தமான மற்றும் பாதுகாப்பான
நீர் உற்பத்தித் திறனுடன், இந்தத் திட்டத்தில் 489 ஹெக்டேர் பரப்பளவில் ஒன்பது
முன்னாள் ஈயச் சுரங்கங்கள் உள்ளடங்கியுள்ளன. அவை நாட்டின் முதல் இரட்டை-
செயல்பாட்டு கொண்ட அதாவது நீர் வழங்கல் திறன் மற்றும் வெள்ளம் தணிப்பாக
(TAPS) செயல்படுகின்றன என அவர்  கூறினார்.


Pengarang :