NATIONAL

நோயினால் பாதிக்கப்பட்ட சொக்காயி – குணசேகரனுக்குச் சொக்சோ மூலம் நிதியுதவி

கிள்ளான் மே 31- நோயினால் பாதிக்கப்பட்டு வேலை செய்யும்
வாய்ப்பை இழந்த சொக்காயி மற்றும் குணசேகரன் ஆகியோருக்கு
மனிதவள அமைச்சர் சிவகுமார் மூலம் சொக்சோ நிதியுதவி கிடைத்தது.

பரிவுமிக்க நிதியுதவி சார்பில் இருவருக்கும் மாதந்தோறும் நிதியுதவி கிடைக்கும்
வாய்ப்பை பெற்றனர்.

காப்பார் கம்போங் பெராபாட்டைச் சேர்ந்த திருமதி சொக்காயி பெரியசாமி வயது 54 நடக்கும் சக்தியை இழந்திருக்கிறார். தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்த இவர் சொக்சோ உறுப்பினர் ஆவார்.

மருத்துவ சிகிச்சை பரிசோதனையில் நோயினால் பாதிக்கப்பட்டு நடக்கும்
சக்தியை இழந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த பிப்ரவரி 17 ஆம்
தேதி இவர் சொக்சோ நிதியுதவிக்கு விண்ணப்பம் செய்தார்.

சொக்சோ நிதியுதவி கிடைக்க தகுதி பெற்றதால் இவருக்கு மிக விரைவாக உதவி
கிடைக்க மனிதவள அமைச்சர் சிவகுமார் பேருதவி புரிந்தார்.

நேற்று சொக்காயி இல்லத்திற்கு நேரடி வருகை புரிந்த அமைச்சர் சிவகுமார் சக்கர
நாற்காலியை வழங்கினார்.

மேலும் மாதந்தோறும் இவருக்கு 550 வெள்ளி சொக்சோ சமூக நல நிதியுதவி உறுதி
கடிதமும் மனிதவள அமைச்சர் சிவகுமார் வழங்கினார்.

இதனிடையே கிள்ளான் மேருவைச் சேர்ந்த குணசேகரன் கருப்பையாவுக்கும் இன்று
சொக்சோ சமூக நல நிதியுதவி கிடைத்தது. ஒரு தனியார் நிறுவனத்தில் உற்பத்தித்
துறையில் பொறியாளராகக் குணசேகரன் கருப்பையா பணிபுரிந்தார் அவருக்கு மூச்சுத் திணறல் மற்றும் இருதயநோய் இருந்தது.

கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. கணபதிராவ் சேவை மையத்தின் சார்பில்
குணசேகரனுக்கு சொக்சோ சமூக நல நிதியுதவிக்கு விண்ணப்பம் செய்யப்பட்டது.

நோயினால் பாதிக்கப்பட்டு பலவீனமாகிவிட்ட இவரால் வேலை செய்ய
முடியாது என்பதை மருத்துவர்கள் உறுதி படுத்தினர். இதனைத் தொடர்ந்து அவருக்கும் இன்று சொக்சோ சமூக நல நிதியுதவி வழங்கப்பட்டது. மாதம் தோறும் இவருக்கு 2,751 வெள்ளி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ கணபதிராவ், சொக்சோ நிறுவனத்தின்
தலைமை செயல் முறை அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் அஸ்மான், கிள்ளான் சொக்சோ
நிறுவனத்தின் நிர்வாகி மோகன்தாஸ், சொக்சோ நிறுவனத்தின் இயக்குநர் டி
கண்ணன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


Pengarang :