SELANGOR

மலேசியாவில் அதிக வருகை விகிதத்தைப் பதிவு செய்த திட்டமாகச் சிலாங்கூர் சாரிங் விளங்குகிறது

ஷா ஆலம், மே 31: மாநில அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச மருத்துவப் பரிசோதனைத் திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டு முதல் மலேசியாவில் 22,767 நபர்கள் பயனடைந்துள்ளனர். இதன் மூலம் மலேசியாவில் அதிக வருகை விகிதத்தைப் பதிவு செய்த திட்டமாக இது விளங்குகிறது.

31 முதல் 45 வயது, 46 முதல் 64 வயது, 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூன்று வயதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் இத்திட்டத்தில் கலந்து கொண்டனர் எனப் பொது சுகாதாரப் பொறுப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் முகநூலில் மூலம் தெரிவித்தார்.

அந்த மூன்று குழுக்களைச் சேர்ந்தவர்கள் மொத்த பங்கேற்பாளர்களில் 78 சதவீதத்தை பிரதிநிதித்துவ படுத்துகின்றனர்.

“சிலாங்கூர் சாரிங் என்பது மலேசியாவில் அதிக வருகை விகிதம் கொண்ட சமூகச் சுகாதார பரிசோதனை திட்டமாகும். இந்நிகழ்விற்கு வருகை விகிதம் 22,767 பங்கேற்பாளர்கள், அதாவது 68.36 சதவீதம் ஆகும்.

“உங்கள் உடல் நிலையைக் கண்டறிய சிலாங்கூர் சாரிங் திட்டத்திற்கு செல்லுங்கள். RM3,000 மதிப்புள்ள இலவச பரிசோதனையைப் பெறலாம்” என்று டாக்டர் சித்தி மரியா மஹ்மூத் இன்று கூறினார்.

இந்த திட்டமானது சிலாங்கூர் நிர்வாகத்தால் குறிப்பாகச் சிலாங்கூர் மாநில மக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஆறு திட்டங்களில் ஒன்றாகும்.

குடும்ப மருத்துவப் பின்னணி, உடல் பருமன் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகளைக் கொண்ட நபர்களை இலக்காகக் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்த மாநில அரசு RM3.4 மில்லியன் ஒதுக்கியது.

மேலும் தகவலுக்கு, 1-800-22-6600 ஐ அழைக்கவும் அல்லது https://selangorsaring.selangkah.my/ நாடவும்.


Pengarang :