NATIONAL

ஜொகூரில் இந்திய மரபுரிமை மையம் – வரலாற்றுபூர்வமான நிகழ்வு 

ஜொகூர், ஜூன் 1: ஜொகூரில் இந்திய மரபுரிமை மையம் திறக்கப்பட்டுள்ளது. இது ஒரு வரலாற்றுபூர்வமான நிகழ்வு என்று ஜொகூர் மந்திரி புசார் டத்தோ ஒன் ஹபிஸ் காஸி தெரிவித்துள்ளார்.

ஜொகூர் மாநிலத்தில் உள்ள 112 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அருள்மிகு ராஜமாரியம்மன் தேவஸ்தானத்தில் இம்மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மையம் அம்மாநிலத்தின் சுற்றுலா துறைக்கும் உதவும் என்று அவர் தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல், இந்நிகழ்வு ஒரு சரித்திரம் வாய்ந்தது என அவர் கருத்து தெரிவித்தார்.

இந்த ஆலயம் 1911ஆம் ஆண்டு கட்டப்பட்டது ஆகும். அதோடு வழிப்பாட்டுத் தளங்களாக இந்திய மக்கள் பயன்படுத்தும் இதுபோன்ற மரபுரிமை கட்டிடங்கள், ஜொகூர் மக்களுக்குச் சுற்றுலா மையங்களாகவும் விளங்குகின்றன. மேலும், இந்த மரபுரிமை மையத்தைப் பராமரிக்கத் தங்கள் தரப்பு உதவுவதாகவும் ஒன் ஹபிஸ் தெரிவித்தார்.

மேலும், அந்த குறிப்பிட்ட ஆலயத்திற்கு 10 லட்சம் வெள்ளி ஒதுக்கீட்டையும் அறிவித்தார்.  ஆலயத் தலைவர் இந்த ஒதுக்கீட்டை வழங்கிய மாநில மந்திரி புசாருக்குத் தனது நன்றியைத் தெரிவித்து கொண்டார். இந்த பணத்தைக் கொண்டு மக்களின் வசதிக்காக ஆலயத்தில் லிப்ட் கட்டபோவதாக அவர் குறிப்பிட்டார்.


Pengarang :