ANTARABANGSA

300 பேரை பலி கொண்ட இரயில் விபத்து- இந்தியாவுக்கு மலேசியா அனுதாபம்

புது டில்லி, ஜூன் 4- நூற்றுக்காணக்கானோர் உயிரிழப்பதற்கும் காயமடைவதற்கும் காரணமான கோர இரயில் விபத்து சம்பவத்திற்காக  இந்தியாவுக்கு மலேசியா தனது அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தங்களின் அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதோடு காயமுற்றவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ரி காடீர் கூறினார்.

இந்த நெருக்கடியான நேரத்தில் இந்தியாவின் துயரத்தில் நாங்களும் பங்கு கொள்கிறோம் என்று அவர் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்தார்.

புதுடில்லியில் உள்ள  மலேசிய தூதரகமும் இதே போன்ற அனுதாபத்தை இந்தியாவுக்கு கடந்த சனிக்கிழமை தெரிவித்திருந்தது.

மீட்புப் பணிகள் வெற்றிகரமாக மேற்கொள்ள பாடுவதற்கு நாங்கள் பிரார்த்திக்கும் அதே வேளையில் இந்த கோர விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கும் எங்களின் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என அது தெரிவித்தது.

சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் யாஷ்வந்த்பூர்-ஹோவ்ரா அதிவிரைவு ரயிலுடன் நேருக்கு நேர் மோதிக்கொண்ட வேளையில் அதே தடத்தில் வந்த சரக்கு இரயிலும் விபத்துக்குள்ளான இரயில்களுடன் மோதியது.

இந்த விபத்தில் இதுவரை 300 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்ட வேளையில் 900 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளை மீட்புக்குழுவினர் துரித கதியில் மேற்கொண்டு வருகின்றனர்.


Pengarang :