NATIONAL

பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி நான்கு பொது இடங்களில் பணம் செலுத்தும் கியோஸ்க்களை ஏற்பாடு செய்துள்ளது

ஷா ஆலம், ஜூன் 6: மக்கள் பில்கள், வரிகள், உரிமங்கள் மற்றும் அபராதங்களை எளிதாகச் செலுத்துவதற்குப் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி நான்கு பொது இடங்களில் பணம் செலுத்தும் கியோஸ்க்களை ஏற்பாடு செய்துள்ளது.

அவ்விடங்கள் ஜாலான் ஓத்மான் பொதுச் சந்தை, தாமான் மெகா பொதுச் சந்தை SS24, பெட்டாலிங் ஜெயா கித்தா பொதுச் சந்தை @ ஶ்ரீ டாமன்சாரா, SD5 மற்றும் “The Spine community centre @ பெட்டாலிங் ஜெயா கித்தா, SS7 ஆகியவை ஆகும் என பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் யூனிட் மீடியா செயலகம் தெரிவித்தது.

  “இந்த கட்டணக் கியோஸ்க் சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்கள் உட்பட ஒவ்வொரு நாளும் காலை 7.30 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படுகிறது.

“இந்த கியோஸ்க்கில் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி சம்பந்தப்பட்ட அனைத்து கட்டணங்களையும் செலுத்தலாம்” என்று ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

பொது மக்கள் தலைமை அலுவலகத்திற்கு வராமல் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி உடனான அவர்களின் நடவடிக்கைகளை எளிமையாகக் கையாள இத்திட்டம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இத்திட்டம் அலுவலக நேரத்தைத் தவிர்த்தும் செயல்படுகிறது.

கியோஸ்க் தொடர்பான ஏதேனும் கேள்விகளுக்கு வருவாய் பிரிவு 03-7956 3544 நீட்டிப்பு 220யைத் தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :