SELANGOR

மோரிப் கடற்கரை ஜூலை 2 ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளது

ஷா ஆலம், ஜூன் 16: நேற்று பந்திங்கில் உள்ள மோரிப் கடல் ஓரத்தில் வீசிய பலத்த காற்று மற்றும் கனமழையால் அப்பகுதியில் விழுந்த மரங்களை வெட்டி சுத்தம் செய்வதற்காக மோரிப் பொழுதுபோக்கு பகுதி பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு ஜூலை 2 ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளது.

கடற்கரைப் பகுதியைச் சுத்தம் செய்வதற்கும் சேதங்களை சரிசெய்வதற்கும் அவ்விடம் மூடுடப்பட்டது என கோலா லங்காட் நகராண்மை கழகம் (MPKL) தனது முகநூலில் வெளியிட்ட ஓர் அறிக்கையின் மூலம் தெரிவித்தது.

நேற்று மாலை முதல் கோலா லங்காட் நகராண்மைக் கழகத்தின் ஸ்குவாட் பந்தாஸ், தீயணைப்புத் துறை, மலேசியக் குடிமைத் தற்காப்புத் துறை, பொதுப்பணித் துறை மற்றும் காவல் துறையுடன் இணைந்து மரங்களை அகற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக எம்.பி.கே.எல் தெரிவித்தது.

– பெர்னாமா


Pengarang :